இலங்கை அணியின் தற்போதைய பிரதான சுழற்பந்து வீச்சாளராக உள்ள சிரேஷ்ட வீரர் ரங்கன ஹேரத், இந்திய அணியுடனான தீர்மானம் மிக்க மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ரங்கன ஹேரத்தின் முதுகில் உள்ள தொடர்சியான உபாதை காரணமாகவே, எதிர்வரும் சனிக்கிழமை டெல்லியில் ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து அவர் விலகியுள்ளார். இதன் காரணமாக, கடந்த திங்கட்கிழமை இலங்கையில் இருந்து அழைக்கப்பட்ட மற்றொரு வலது கை சுழல் வீரரான ஜெப்ரி வெண்டர்சே ரங்கன ஹேரத்தின் இடத்தை நிரப்பவுள்ளார்.
தனது திட்டங்களை விளக்கும் புதிய அணித் தலைவர் திசர
எமது ஒவ்வொரு வீரர்களது திறமையையும் ஒப்பிட்டால்…
இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் கிரேம் லப்ரோய், ”நாம் ஹேரத்திற்கு ஓய்வு கொடுப்பதற்கு உத்தேசித்து, அவரை உடனடியாக மீண்டும் அணியில் இருந்து அழைப்பதற்கு முடிவெடுத்தோம். ஹேரத்தின் இடத்தை ஜெப்ரி வெண்டர்சே நிரப்புவார்” எனத் தெரிவித்தார்.
ரங்கன ஹெரத், இறுதியாக இலங்கையில் இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடினார். எனினும், குறித்த இதே உபாதை அவருக்கு இருந்தமையினால் அத்தொடரின் இறுதி டெஸ்டில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவில் தற்பொழுது இடம்பெறும் டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் ஹேரத் விளையாடினார். இதன் முதல் போட்டி சமநிலையில் நிறைவுற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் படு தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தீர்மானம் மிக்க மூன்றாவது டெஸ்டில் இலங்கை அணிக்காக களமிறங்குவதன்மூலம் ஜெப்ரி வெண்டர்சே நாட்டுக்கான தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.
ஜெப்ரி வண்டர்சே இதுவரை 11 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 7 T-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே, இவர் தனது 27ஆவது வயதில் இலங்கை டெஸ்ட் அணிக்காக இணையவுள்ளார். இவர் இதுவரை 36 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 24.87 என்ற சராசரியுடன் 168 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள
இலங்கை டெஸ்ட் குழாமில் இணையும் ஜெப்ரி வெண்டர்சே
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில்…
இலங்கை அணியைப் பொறுத்தவரை கடந்த வருடங்கள் வீரர்களை அதிகமாக காயத்திற்கு உள்ளாக்கும் ஆண்டுகளாகவே உள்ளன. அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குனரத்ன, லசித் மாலிங்க, குசல் ஜனித் பெரேரா, நுவன் பிரதீப் போன்ற முன்னணி வீரர்களின் கடந்த கால உபாதைகளானது இலங்கை அணிக்கு பெரிய இழப்பாகவே அமைந்தன.
எனினும், மெதிவ்ஸ் போன்ற வீரர்கள் அடிக்கடி அணியில் இணைவதும் மீண்டும் உபாதையினால் ஓய்வெடுப்பதும் என்ற ஒரு துர்ப்பாக்கியமான நிலைமைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டிருந்தது.
எனவே, விளையாட்டைப் பொறுத்தவரை தொடர் உபாதைகளிலிருந்து ஒரு வீரர் முழுமையாக மீண்டு வருவதற்கு, அவருக்கு நீண்ட மற்றும் முழுமையான ஒரு ஓய்வு தேவை என்பது முக்கிய விடயமாகும்.
தற்பொழுது 39 வயதை அடைந்துள்ள ஹேரத்தின் உபாதை விடயத்தில் இலங்கை கிரிக்கெட் அதிக கவனம் செலுத்துவது அத்தியவசியமாகும். காரணம், அவர் தனது வயதைப் மிஞ்சிய அளவில் சிறந்த பந்து வீச்சை மேற்கொள்ளும் ஒரு வீரராக உள்ளார்.