இலங்கை ரக்பி அணியானது, இம்மாதம் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குகொள்ளவுள்ளது. இத்தொடரில் பங்குகொள்ளும் இலங்கை அணியானது, 8 அறிமுக வீரர்களைக் கொண்டுள்ளது.
ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கை ரக்பி குழாம் அறிவிப்பு
அதேநேரம், தாரிக் சாலிஹ் (CR & FC), அஷான் டார்லிங், நிஷோன் பெரேரா, உமேஷ் மதுஷான்..
ரிச்சர்ட் தர்மபால (கண்டி விளையாட்டுக் கழகம்)
இலங்கை ரக்பி அணிக்காக பலமுறை விளையாடி இருந்தாலும், 15 பேர் கொண்ட அணியில் தர்மபால விளையாடுவது இதுவே முதன் முறையாகும். கல்கிஸ்ஸை விஞ்ஞான கல்லூரியின் பழைய மாணவரான இவர், நடைபெற்று முடிந்த டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் 12 ட்ரைகள் வைத்தமை குறிப்பிடத்தக்கது. அநேகமாக விங் நிலையில் விளையாடும் இவர், தேவைப்பாட்டால் மத்திய வரிசையிலும் விளையாடக்கூடியவர்.
திலின விஜேசிங்க (கண்டி விளையாட்டுக் கழகம்)
2013 ஆம் ஆண்டு பாடசாலை லீக் கிண்ணத்தை வென்ற தர்மராஜ கல்லூரியின் அங்கத்தவராவார். கடின உழைப்பின் மூலம் கண்டி விளையாட்டுக் கழகத்தில் விளையாடிய இவர், நடைபெற்று முடிந்த லீக் போட்டிகளில் 118 புள்ளிகளை (1T, 37C ,10P, 3DG ) கண்டி அணி சார்பாக பெற்றுக்கொடுத்து , கண்டி அணியின் வெற்றிக்கு பெரும் பங்களித்தார். 23 வயதாகும் இவர், 16 வயதிற்கு உட்பட்ட இலங்கை காற்பந்தாட்ட அணியின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிஷோன் பெரேரா (ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)
தனுஷ்க ரஞ்சனின் வெளியேற்றத்திற்குப் பின்னர் ஹெவலொக் அணியின் 13 ஆம் இலக்க வீரராக சிறப்பாக பிரகாசித்தவர் நிஷோன் பெரேரா. புனித பேதுறு கல்லூரியின் பழைய மாணவரான இவர், போர்னியோ 7s இற்கான இலங்கை 7 பேர் கொண்ட அணியில் இடம்பெறாதது துரதிஷ்டமாகும். கடந்த வருடம் நடைபெற்ற 20 வயதிற்கு உட்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய சம்பியன்ஷிப் போட்டிக்காக இலங்கை அணியில் விளையாடிய இவர், நடைபெற்று முடிந்த டயலொக் லீக் போட்டிகளில் 8 ட்ரைகளை வைத்துள்ளார். அதிக திறமையுடைய இவர், தனுஷ்க ரஞ்சனிற்கு பின்னர் அவரது இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
உமேஷ் மதுஷான் (ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)
இலங்கை ரக்பி அணியில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு இளம் வீரராவார். றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பிளேன்கர் நிலையில் விளையாடும் வீரர் ஆவார். 2015 ஆம் ஆண்டு பாடசாலை லீக் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்ற றோயல் கல்லூரி அணியின் ஒரு அங்கத்தவராவார். சுஹிரு அந்தோணி, ஷாரோ பெர்னாண்டோ மற்றும் சஜித் சாரங்க ஆகிய அனுபவமிக்க வீரர்கள் அணியில் காணப்படுவதால், இவர் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே களமிறங்குவாரா என்பது சிறிது சந்தேகமே.
இலங்கை ரக்பி அணி மீது முழு நம்பிக்கை வைத்துள்ள பிஜி பயிற்றுவிப்பாளர்
இலங்கை ரக்பி வாரியமானது (SLR), இம்மாதம் (மே) 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி..
அஷான் டார்லிங் (ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)
இவர் இசிபதன கல்லூரிக்கு 2014 ஆம் ஆண்டு ஒரு முக்கிய வீரராக திகழ்ந்தார். அதேவேளை நடைபெற்று முடிந்த டயலொக் லீக் போட்டிகளில், ஹெவலொக் அணிக்கு பெரும் பலமாக இவர் அமைந்தார். தனது வேகத்தையும், ஸ்க்ரம் நுட்பங்களையும் அதிகரித்துக்கொண்ட இவர், முன் வரிசைக்கு பெரும் பலமாகும். இருந்தாலும், கானுக திஸாநாயக மற்றும் துஷ்மந்த பிரியதர்ஷன ஆகிய அனுபவமிக்க வீரர்களைப் பின் தள்ளி இவர் போட்டியில் விளையாடுவாரா என்பது ஐயமே.
ஜோயல் பெரேரா (பொலிஸ் விளையாட்டுக் கழகம்)
பொலிஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜோயல் ஆகும். ஜனாதிபதி கிண்ணத்தை வென்ற வெஸ்லி கல்லூரியின் ஒரு அங்கத்தவர் ஆவார். லைன் அவுட்களில் இவரது திறமை இலங்கை அணிக்கு பெரும் பலமாகும். நடைபெற்று முடிந்த டயலொக் லீக் போட்டிகளின் ஆரம்பத்தில் உபாதையின் காரணமாக விளையாடாவிட்டாலும், தற்போது பூரண குணமடைந்து விளையாடத் தயார் நிலையில் உள்ளார். இவர் அநேகமாக பிளேன்கர் நிலை வீரராக களம் இறங்குவார்.
மலேசியா செல்லும் இலங்கை ரக்பி அணியின் தலைவராக ரொஷான் வீரரத்ன
ரக்பி லீக் மற்றும் நொக்அவுட் ஆகிய இரு தொடர்களினதும் நடப்புச்..
தாரிக் ஸாலிஹ் (CR & FC)
இவர் CR & FC அணியின் முக்கிய வீரராவார். கடந்த வருடம் நடைபெற்ற அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய றக்பி தொடரில் சம்பியனான இலங்கை அணியின் அங்கத்தவர் ஆவார். 2015 ஆம் ஆண்டு புனித ஜோசப் கல்லூரி றக்பி அணிக்கு தலைமை தாங்கியதிலிருந்து தன்னை அதிகமாக செம்மைப்படுத்தியுள்ளார். இலங்கை 7 பேர் அணிக்கும் விளையாடத் தகுதி இருந்தாலும், அதற்கான வேகத்தை இவர் கொண்டிராததால் அணியில் இடம்பெறவில்லை. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் போட்டியில் இவர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிச்சி தர்மபால (கடற்படை விளையாட்டுக் கழகம்)
தலைவர் ரொஷான் வீரரத்னவிற்கு அடுத்ததாக இவர் சிறந்த தெரிவா என்பது சந்தேகமே. ஏனெனில், ஹெவலொக் அணியின் சுதம் சூரியாராச்சியும் நடைபெற்று முடிந்த டயலொக் லீக் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். எவ்வாராயினும் ரிச்சி தர்மபால கடற்படை அணிக்கு பெரும் பலமாகத் திகழ்ந்தார். இப்போட்டித் தொடர் இவருக்கு நிறைய அனுபவத்தை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.