தம்புள்ளையில் நாளை (10) ஆரம்பமாகவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்காக இலங்கை கிரிக்கெட் சபை அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட செயல்திறன் உளவியலாளர் டொக்டர் பிலிப் ஜோன்சியின் சேவையை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களில் இரு அமர்வுகளை நடத்திய ஜோன்சி, இலங்கை தேசிய அணிக்காக செயற்படுவது இது மூன்றாவது முறையாகும்.
கிரஹெம் லெப்ரோய் இரண்டு பதவிகளை வகிப்பது குறித்து ஐசிசி அறிக்கை
இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக …
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச அரங்கில் வைத்து திங்களன்று (08) ஜோன்சி பயிற்சியாளர் ஹத்துருசிங்கவுடன் இணைந்து தனிப்பட்ட முறையில் வீரர்களுடன் பேசுவதை காண முடிந்தது.
தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை வீழ்த்த போட்டியை நடத்தும் இலங்கை அணி எதிர்பார்த்திருக்கும் நிலையில், அவர் ஒட்டுமொத்த குழாத்துடனும் ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை நெருக்கமாக பணியாற்றவுள்ளார்.
இலங்கை தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்கவே இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனத்திடம் அவரின் சேவையை கோரியுள்ளார். இந்த இருவரும் இதற்கு முன்னர் சிட்னி தண்டர் (அவுஸ்திரேலிய பிக்பாஷ் அணி) மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்காக இணைந்து செயற்பட்டுள்ளனர்.
உளவியல் துறையில் விரிவுரையாளராக செயற்படும் ஜோன்சி, அவுஸ்திரேலிய பேஸ்போல் மற்றும் குவீன்ஸ்லாந்து புல்ஸ் கிரிக்கெட் அணிகளுக்கு ஒரு உளவியலாளராக பணியாற்றியுள்ளார். 1994 தொடக்கம் 2008 வரை பிரிஸ்பான் லயன்ஸ் AFL அணிக்கு உளத் திறன் தொடர்பான பயிற்சியாளராக செயற்பட்டிருக்கும் ஜோன்சி பிரிஸ்பான் ப்ரோன்கோஸ் NRL அணியின் விளையாட்டு உளவியலாளராகவும் உள்ளார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…