11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி காலி அணியின் வெற்றிக்கு வித்திட்ட கயான் சிரிசோம

181

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டு உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரின் நான்கு போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்தன.

காலி கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையட்டுக் கழகம்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் காலி கிரிக்கெட் கழக அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பொலிஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 95 (28.3) – சமித் துசாந்த 23, கயான் சிரிசோம 5/29, லசித் பெர்னாண்டோ 5/49

காலி கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 315 (107) – ஹசந்த பெர்னாண்டோ 65, லசித் பெர்னாண்டோ 64, தமித ஹுன்னுகும்புற 53, திலின மஸ்முல்ல 31, நிமேஷ் விமுக்தி 6/103

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 228 (69.3) – தரிந்து தில்ஷான் 64, நிமேஷ் விமுக்தி 65, தினுஷ பெர்னாண்டோ 41, கிரிஷான் அபேசூரிய 2/28, கயான் சிரிசோம 6/91

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 11/0 (1.5)

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்  

பாணந்துறை விளையாட்டுக் கழக மைதனத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.  

துஷான் விமுக்தியின் 9 விக்கெட்டுகளால் இலங்கை இராணுவப்படை அணிக்கு வெற்றி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லங்கன் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பாணந்துறை அணிக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 218 (60.1) – காஷிப் நவீத் 50, சகுரங்க பொன்சேகா 39, ரசிக பெர்னாண்டோ 39, சுரேஷ் பீரிஸ் 31, நவீன் கவிகார 4/80, தினுஷ்க மாலன் 3/42, சானக ருவன்சிரி 2/31

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 269 (53.4) – லக்ஷான் ரோட்ரிகோ 103, சானக ருவன்சிரி 48, சுரேஷ் பீரிஸ் 7/82, தனுஷிக பண்டார 3/92  

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்)- 334 (92.1) – சகுரங்க பொன்சேகா 75, சாஸ்ரிக புஸ்சேகொள்ள 67, சுரேஷ் பீரிஸ் 53, சானக ருவன்சிரி 4/91, நவீன் கவிகார 3/86

லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 208/8 (63) – சானக ருவன்சிரி 46, மதுரங்க சொய்சா 38, சஷீன் பெர்னாண்டோ 32, தனுஷிக பண்டார 5/51

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது


விமானப்படை விளையாட்டுக்கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக்கழகம்

கடற்படை விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கடற்படை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை விமானப்படை அணிக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடரில் திடீர் மாற்றம்

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 304 (83.5) – SADU மிஹிறான் 115, ரவீந்து குணவர்தன 49*, சமிகார ஹேவகே 32, ஹேஷான் ஒமேந்திர 31, தருஷ இத்தமல்கொட 4/39, சுதாரக தக்ஷின 3/68, நுவன் சம்பத் 2/33

கடற்படை விளையட்டுக் கழகம (முதலாவது இன்னிங்ஸ்) – 285 (75.3) – புத்திக்க ஹசரங்க 93, குசல் எடுசூரிய 56, தருஷ இத்தமல்கொட 42, சொஹான் ராங்கிக 5/88, புத்திக்க சந்தருவன் 3/84

விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 326/6d (89.4) – உதய்வங்ச பராக்கிரம 155, லியாம் சமிகார 59, சுமிந்த லக்ஷான் 41, குசல் எடுசூரிய 3/54

கடற்படை விளையட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 108/3 (18) – ஹமீட் அஸ்பர் 46, புத்திக்க சந்தருவன் 3/37

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


குருநாகலை இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

குருநாகலை வெலகெதர மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற களுத்துறை நகர கழகம் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை குருநாகலை இளையோர் கிரிக்கெட் கழகத்துக்கு வழங்கியது.

போட்டியின் சுருக்கம்

குருநாகலை இளையோர் கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 405/9d (126) – தமித் பெரேரா 88, ருவந்த ஏகநாயக 72, பிரபாஷ் கெப்பெடிபோல 59*, தரிந்து தசநாயக 46. லக்ஷான் ஜெயசிங்ஹ 2/56, மதீஷ பெரேரா 2/101

களுத்துறை நகர கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 305 (92.2) – நிபுன காரியவசம் 92, கீத் பெரேரா 86, சானக சம்பத் 43, கல்ஹான் சினெத் 3/73, துஷித டி சொய்சா 2/51

குருநாகலை இளையோர் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 200/4 (48) -சரிந்த தசநாயக 68, மலித் குரே 60*, சரித் மென்டிஸ் 58, லக்ஷான் ஜயசிங்ஹ 2/49

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது