கெரோனா வைரஸினால் தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் ஒத்திவைப்பு

178

சீனா முழுவதும் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக இம்மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டித் தொடர் மற்றும் தேசிய விளையாட்டு விழா நகர்வல ஓட்டப் போட்டிகள் என்பவற்றை எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைப்பதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.  

தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் முதல்தடவையாக இலங்கையில்

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2ஆவது …

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நுவரெலியாவில் நடைபெறவிருந்தது

இந்தப் போட்டித் தொடரானது விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண பங்களிப்புடன் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன

இம்முறை போட்டித் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவுகள் மற்றும் பூட்டான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 28 வீர வீராங்கனைகள் கலந்துகொள்ள இருந்தனர்

அத்துடன், இந்தத் தொடருடன் 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் நகர்வல ஓட்டப் போட்டிகளையும் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது

இந்நிலையிலேயே, தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரவமாக பரவி வருவதால் தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டு விழா நகர்வல ஓட்டப் போட்டிகளை எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸினால் ஆசிய உள்ளக மெய்வல்லுனர் போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் சீனாவில் தீவிரமாக பரவி வருவதால், அந்நாட்டில் நடைபெற இருந்த…

இதுஇவ்வாறிருக்க, நுவரெலியாவில் இம்மாதம் 5ஆம் திகதி நடைபெறவிருந்த இலங்கை இராணுவ தொண்டர் படைப் பிரிவு நகர்வல ஓட்டப் போட்டியையும் ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

சீனாவில் மிகத் தீவிரமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது

மேலும், 75 ஆயிரம் பேருக்கு அதிகமானவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் உலகளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், சீனாவில் நடைபெறவிருந்த பெரும்பாலான சர்வதேசப் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது

இதில் முதலாவதாக இம்மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் சீனாவின் ஹன்ங்ஸு நகரில் நடைபெறவிருந்த ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை தற்காலிகமாக ஒத்திவைக்க ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்தது.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பிடித்த புவிதரன், டக்சிதா, தீபிகா

தாய்லாந்தின் பெங்கொக் நகரில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட…

இதனையடுத்து சீனாவின் நன்ஜிங்கில் எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவிருந்த உலக உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை ஒத்திவைப்பதாக உலக மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்தது.  

அதுமாத்திரமின்றி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஷங்காய் நகரில் நடைபெறவிருந்த போர்முயலா-1 மோட்டார் பந்தயத்தின் சீனா கிரேன்ட் பிரிக்ஸ் தொடரை ஒத்திவைக்க சர்வதேச மோட்டார் பந்தய சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு உலக நாடுகளில் நடைபெறவிருந்த போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில், பிரித்தானியாவில் நடைபெறவிருந்த பெண்களுக்கான கூடைப்பந்து ஒலிம்பிக் தகுதிகாண் சுற்றுப் போட்டிகள், பெப்ரவரி 9ஆம் திகதி நடைபெறவிருந்த ஹொங்கொங் சர்வதேச மரதன் ஓட்டப் போட்டிகள் என்பன அடங்கும்

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<