இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் மிலான் ரத்நாயக்க டெஸ்ட் அறிமுகத்தை பெறவுள்ளார்.
மென்செஸ்டரில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியின் பதினொருவரை இன்றைய தினம் (20) இலங்கை கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
>>பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வி
இதில் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து இலங்கை டெஸ்ட் குழாத்தில் கடந்த காலங்களில் இடத்தை பெற்றுக்கொண்ட மிலான் ரத்நாயக்க டெஸ்ட் அறிமுகத்தை பெறவுள்ளார். இவர் 40 போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மிலான் ரத்நாக்கவுடன் வேகப்பந்துவீச்சாளர்களாக அசித பெர்னாண்டோ மற்றும் விஷ்வ பெர்னாண்டோ இணைக்கப்பட்டுள்ளனர். இதில் லஹிரு குமார, நிசல தாரக மற்றும் கசுன் ராஜித ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
சுழல் பந்துவீச்சாளராக பிரபாத் ஜயசூரிய பெயரிடப்பட்டுள்ளதுடன், பகுதிநேர சுழல் பந்துவீச்சாளராக தனன்ஜய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டி்ஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
>>தென்னாபிரிக்காவிற்கு எதிரான மே.இ.தீவுகள் T20 குழாம் அறிவிப்பு
துடுப்பாட்ட வீரர்களை பொருத்தவரை திமுத் கருணாரத்னவுடன் நிசான் மதுஷ்க களமிறங்கவுள்ளார். எனவே பெதும் நிஸ்ஸங்க முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். இந்தநிலையில் குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரும் முதல் போட்டிக்கான பதினொருவரில் இடம்பெற்றுள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை பதினொருவர்
நிசான் மதுஷ்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<