உலகளாவிய ரீதியில் தீவிரம் காட்டிவரும் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) காரணமாக, விளையாட்டுத்துறை மாத்திரமின்றி உலகம் முழுவதும் முற்றுமுழுதாக முடங்கியுள்ளது.
விளையாட்டுத்துறை முற்றுமுழுதாக முடங்கியுள்ளதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பளார் மிக்கி ஆர்தர், கொரோனா பாதிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அயன் மேன் திசர பெரேரா!
கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற T20……………………
“கொவிட்-19 நோய் காரணமாக சர்வதேச ரீதியில், விளையாட்டுத்துறை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதாரமும், மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளமை ஏமாற்றத்துக்குறிய விடயமாகும். அத்துடன், கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ள அனைவருக்காகவும் பிராத்திக்கிறேன். அதேநேரம் கிரிக்கெட் என்ற பலம் மிக்க விளையாட்டு, மேலும் பலத்துடன் மீண்டு வரும் என நம்புகிறேன்” என்றார்.
மிக்கி ஆர்தர், இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த ஜிம்பாப்வே தொடரின் போது பதவியேற்றிருந்தார். இவர் பதியேற்றதன் பின்னர், ஜிம்பாப்வேயில் டெஸ்ட் தொடரை வென்ற இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வெற்றிக்கொண்டிருந்தது.
குறித்த தொடர்களில் இலங்கை அணியில் சில முன்னேற்றங்களை அடையாளம் கண்டிருந்த போதும், கொவிட்-19 தொற்று காரணமாக இலங்கை அணியின் தயார்படுத்தல்களுக்கு தடை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், பயிற்றுவிப்பாளர்களுக்கான திட்டம் மற்றும் வீரர்களுக்கான திட்டம் தெடர்பிலும் மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார்.
“நாம் பயிற்றுவிப்புக்கு வருகைதந்த முதல் மூன்று மாதங்களில் புதிய வீரர்களை அடையாளம் காண்பதுடன், தனிப்பட்ட ஒவ்வொரு வீரர்களுக்குமானதும், அணிக்கானதுமான தனித்தனியான திட்டங்களை நாம் வகுத்திருந்தோம். அதன்படி, இந்த கட்டமைப்புக்கு ஏற்ப வீரர்களின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைகிறோம். அதுமாத்திரமின்றி அனைத்து வகையான போட்டிகளுக்குமான எமது அடுத்த குறிக்கோள்களுக்காக வீரர்கள், சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்குவது மற்றும் அவர்களுடைய தயார்படுத்தல்கள் மேலும் மகிழ்ச்சியளிக்கிறது”
பொலிஸாருக்கு உதவி செய்து பிறந்த நாளைக் கொண்டாடிய அவிஷ்க பெர்னாண்டோ
கொரோனா வைரஸ் காரணமாக…………………..
இதேநேரம், வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது வீடுகளில் தங்கியுள்ள நிலையில், அவர்களுக்கான உடற்தகுதி எவ்வாறு பேணப்படுகிறது. அதற்கான எவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்பது தொடர்பிலும் மிக்கி ஆர்தர் கருத்து வெளியிட்டார்.
“ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களுக்கும், அவர்களிடத்தில் இருக்கும் வசதியைக் கொண்டு உடற்தகுதியை பேணுவதற்கான திட்டங்கள், எங்களது உடற்தகுதி பயிற்றுவிப்பாளர்களான டிஷான் பொன்சேகா மற்றும் போல் கௌவூரி ஆகியோரிடமிருந்து வழங்கப்பட்டுள்ளது. பயிற்றுவிப்பாளர்கள் முழு மூச்சுடன் வீரர்களின் உடற்தகுதியில் கவனம் செலுத்துவதுடன், எனது பங்கிற்கு நானும் சில உடற்பயிற்சிகளை வீரர்களுக்கு வழங்கியுள்ளேன்.
அதுமாத்திரமின்றி, ஒவ்வொரு வீரருக்குமான பலம் மற்றும் பலவீனங்களுக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகளானது வீரர்களின் மனநிலை, உடற்தகுதி மற்றும் அவர்களுடைய நுணுக்கங்களை வெளிப்படுத்துவதற்கு உதவும்” என்றார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<