இங்கிலாந்துக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாம்

3340
Upul , Randiv , Maharoof

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது

இந்தப் போட்டி முடிந்தபின் இலங்கை அணி 16ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் அயர்லாந்து அணியோடு 2 ஒருநாள் போட்டிகளிலும் அதன்பின் ஜூன் 21 முதல் இங்கிலாந்து அணியோடு 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் போட்டிகளில் விளையாடும் 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதில் டெஸ்ட் போட்டிகளில் பிரகாசித்து வரும் 21 வயதான குசல் மெண்டிஸிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சமிந்த பண்டார சகலதுறை வீரர்காளன தசுன் சானக மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.  

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் குழாமில் 5 பேர் இணைப்பு

கடைசியாக 2012ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய சகலதுறை வீரர் பர்வீஸ் மஹ்ரூபும் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார். 2015/16 ஆண்டுக்கான பிரீமியர் லிமிடெட் ஓவர்கள் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி 5 போட்டிகளில் 6.31 என்ற பந்துவீச்சு சராசரியில் மஹ்ரூப் 16 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்ததன் மூலமே அவர் மீண்டும் அணிக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

16 பேர் அடங்கிய இலங்கை ஒருநாள் குழாம்

1. எஞ்சலொ மெதிவ்ஸ் (தலைவர்)
2. தினேஷ் சந்திமால் (உப தலைவர்)
3. குசல் ஜனித் பெரேரா
4. தனுஷ்க குணதிலக்க
5. உபுல் தரங்க
6. குசல் மெண்டிஸ்
7. லஹிரு திரிமன்ன
8 .தனஞ்சய டி சில்வா
9. சீகுகே பிரசன்னா
10.சுராஜ் ரன்திவ்
11. தசுன் சானக
12. பர்வீஸ் மஹ்ரூப்
13. நுவான் பிரதீப்
14. சுரங்க லக்மால்
15. சமிந்த பண்டார
16. ஷாமிந்த எரங்க

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்