இலங்கை 23 வயதின் கீழ் பூர்வாங்க குழாம் அறிவிப்பு

762

2022ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள 23 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசிய கால்பந்து சம்மேளன (AFC) கிண்ண தொடருக்கான தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை பூர்வாங்க குழாம் இலங்கை கால்பந்து சம்மேளத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 11 நாடுகளில் நடைபெறவுள்ள இந்த தகுதிகாண் போட்டிகளில் குழு A இல் இடம்பெற்றுள்ள இலங்கையின் 23 வயதின் கீழ் அணி, இந்த தகுதிகாண் போட்டிகளினை கட்டாரில் விளையாடவிருக்கின்றது.

போராட்டத்தின் பின் நேபாளத்திடம் வீழ்ந்தது இலங்கை

ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளுக்கான A குழுவில் இலங்கையுடன் கட்டார், யெமன் மற்றும் சிரிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த தகுதிகாண் போட்டிகளுக்கான தயார்படுத்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையின் 23 வயதின் கீழ் கால்பந்து பூர்வாங்க குழாமில் உள்ள 33 வீரர்களும் கட்டாரில் விஷேட பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை இலங்கை கால்பந்து சம்மேளத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் வழங்கியுள்ளார். அதன்படி குறித்த குழாம் எதிர்வரும் 12ஆம் திகதி கட்டார் பயணமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

WATCH – தமது முன்னாள் வீரரால் வீழ்ந்த பார்சிலோனா | FOOTBALL ULAGAM

இதேநேரம் பயிற்சிகளுக்காக செல்லும் இலங்கை 23 வயதின் கீழ்ப்பட்ட கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மொஹமட் அமானுல்லா செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை 23 வயதின் கீழ்ப்பட்ட கால்பந்து பூர்வாங்க குழாம்

செனால் தினேஷ் – ப்ளூ ஸ்டார் வி.க, டேனியல் மெக்ராத் கோமெஸ் – ப்ளூ ஸ்டார் வி.க, மொஹமட் ஆகீப் – கொழும்பு கா.க, அப்துல் பாசித் – கொழும்பு கா.க, சபீர் ரசூனியா – கொழும்பு கா.க, மொஹம்மத் சக்கீர் – கொழும்பு கா.க, ரிப்கான் மொஹமட் – டிபன்டர்ஸ் கா.க, நுவான் கிம்ஹான – டிபன்டர்ஸ் கா.க, சசங்க டில்ஹார – டிபன்டர்ஸ் கா.க, பிரியன் வீரப்புலி – மாத்தறை சிட்டி கழகம், பதுர்தீன் தஸ்லிம் – நியூ ஸ்டார் வி.க, சத்துரங்க பெர்னான்டோ – நியூ யங்ஸ் வி.க, ருமேஷ் மெண்டிஸ் – நியூ யங்ஸ் வி.க, லக்ஷான் தனன்ஞய – நியூ யங்ஸ் வி.க, கவின் சுச்சாரித் – நியூ யங்ஸ் வி.க, மரியநேசன் பிரசாந்த் – ரட்னம் வி.க, மொஹமட் முர்சித் – ரட்னம் வி.க, வரதராஜா ஜக்ஷன் – ரட்னம் வி.க, மொஹமட் முஷ்பிர் – ரினெவ்ன் வி.க, மொஹமட் சஜித் – ரினெவ்ன் வி.க, மொஹமட் அமான் – ரினெவ்ன் வி.க, ரசா ரூமி – ரினெவ்ன் வி.க, அசேல மதுஷன் – சீ ஹோக்ஸ் கா.க, அவிஷ்க தேஷன் – சீ ஹோக்ஸ் கா.க, உதயங்க பெரேரா – சீ ஹோக்ஸ் கா.க, மொஹமட் குர்ஷித் – சீ ஹோக்ஸ் கா.க, தனன்ஞய டி சில்வா – சீ ஹோக்ஸ் கா.க, அவிஷ்க கவின்து – சீ ஹோக்ஸ் கா.க, சிஷான் ப்ரபுத – இலங்கை பொலிஸ் வி.க, ஹஷிக நவோத – இலங்கை பொலிஸ் வி.க, பெதும் நிமுக்தி – அப் கண்ட்ரி லயன்ஸ், கன்னண் தேனுஷன் – உருத்திரபுரன் வி.க, யுவராசா தனுஷன் – உருத்திரபுரன் வி.க.

(வி.க. – விளையாட்டு கழகம், கா.க. – கால்பந்து கழகம்)

இலங்கை அணியின் போட்டிகள்

  • ஒக்டோபர் 25ஆம் திகதி – இலங்கை எதிர் சிரியா
  • ஒக்டோபர் 28ஆம் திகதி – இலங்கை எதிர் கட்டார்
  • ஒக்டோபர் 31ஆம் திகதி – இலங்கை எதிர் யெமன்

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<