இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை உள்வாங்குவதற்கான தேர்வுகள் அண்மையில் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை கால்பந்து சம்மேளனம் இம்முறை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்களின் விபரங்களை இன்று (09) வெளியிட்டுள்ளது.
இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான நிசாம் பக்கீர் அலியின் கண்கானிப்பின் கீழ் நாடு முழுவதும் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கும் நோக்கில், இம்முறை தேர்வுகள் பல பாகங்களிலும் பல கட்டங்களாக இடம்பெற்றன.
அதன் நிறைவில் தற்பொழுது A மற்றும் B என இரண்டு குழாம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் A குழாமில் 30 வீரர்களும் B குழாமில் 18 வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.
தற்பொழுது தெரிவாகியுள்ள வீரர்களில், ஏற்கனவே தேசிய அணியில் அங்கம் வகித்த வீரர்களுடன் இணைந்து மேலும் பல இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.
வட மாகாண கழகங்களில் இருந்து ஒரே ஒரு வீரர் மாத்திரம் இந்த குழாமில் இணைக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாண கழகங்களில் இருந்து இரண்டு வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.
A குழாம்
முன்கள வீரர்கள்
D.T.S.அனுருத்த (நியு யங்ஸ் கா.க) – மொஹமட் ரஹுமான் (ரெட் ஸ்டார் கா.க) – அசேல மதுஷான் (புனித ஜோசப் கல்லூரி) – சபீர் ரசூனியா (ஜாவா லேன் வி.க) – மொஹமட் சிபான் (மாவனல்லை யுனைடட் வி.க) – சர்வான் ஜோஹர் (கொழும்பு கா.க)
மத்தியகள வீரர்கள்
மொஹமட் அஸ்மீர் (கடற்படை வி.க) – தனுஷ்க மதுசங்க (கடற்படை வி.க) – கவிந்து இஷான் (விமானப்படை வி.க) – அபீல் மொஹமட் (கொழும்பு கா.க) – மொஹமட் ரிப்னாஸ் (கொழும்பு கா.க) – மரியதாஸ் நிதர்சன் (சென்.மேரிஸ் வி.க, யாழ்ப்பாணம்) – சுந்தராஜ் நிரேஷ் (சௌண்டர்ஸ் வி.க) – மொஹமட் முஸ்தாக் (யங் ஸ்டார் வி.க, மட்டக்களப்பு) – சதுர லக்ஷான் (க்ரீன் பீல்ட் வி.க, களுத்தறை) – சசன்க ஜயசேகர (ரட்னடம் வி.க)
பின்கள வீரர்கள்
ஜூட் சுபன் (ரினௌன் வி.க) – டிக்சன் பியுஸ்லஸ் (நியு யங்ஸ் கா.க) – உதய கீர்த்தி (இராணுவப்படை வி.க) – அமித் குமார (பெலிகன்ஸ் வி.க) – சன்ஜுக பிரியதர்சன (சௌண்டர்ஸ் வி.க) – சமித் சுபாசன (டொன் பொஸ்கோ வி.க) – சுபாஷ் மதுசான் (கடற்படை வி.க) – லஹிரு தாரக (புளு ஸ்டார் வி.க)
கோல் காப்பாளர்கள்
ராசிக் ரிஷாட் (ரினௌன் வி.க) – தனுஷ்க ராஜபக்ஷ (நியு யங்ஸ் வி.க) – ப்ரபாத் ருவன் அறுனசிறி (விமானப்படை வி.க) – S.சுதேஷ் (SLTB வி.க) – கவீஷ் பெர்னாண்டோ (கொழும்பு கா.க)
Standby
ஹர்ஷ பெர்னாண்டோ (விமானப்படை வி.க) – D.K துமிந்த (விமானப்படை வி.க) – மொஹமட் பசால் (கொழும்பு கா.க) – டிலான் கெளசல்ய (கொழும்பு கா.க) – ஜீவன்த பெர்னாண்டோ (விமானப்படை வி.க)
B குழாம்
முன்கள வீரர்கள்
சல்மான் அஹமட் (மாவனல்லை யுனைடட்) – மொஹமட் அர்சாட் (வெகனர்ஸ் வி.க) – ரியாஸ் அஹமட் (மாவனல்லை யூத் வி.க) – சதுரங்க பெரேரா (இராணுவப்படை வி.க) – நெத்ம மல்ஷான் (சொலிட் வி.க)
மத்தியகள வீரர்கள்
ஷெஹான் யஷ்மில (கிரீன் பீல்ட் வி.க, களுத்தறை) – அமான் பைசர் (ரட்னம் வி.க) – பரூட் பாயிஸ் (ஜாவா லேன் வி.க) – மொஹமட் முஜாஹித் (கெலி ஓய கா.க, கம்பளை) – பாசித் அஹமட் (கிறிஸ்டல் பெலஸ் கா.க) – தேஷான் பெரேரா (வெகனர்ஸ் வி.க) – மொஹமட் சஹீல் (கடற்படை வி.க)
பின்கள வீரர்கள்
தரிந்து மதுசங்க (நியு யங்ஸ் கா.க) – விகும் அவிஷ்க (ரெட் ஸ்டார் கா.க) – S.M.வசித் (கெடேரியன் வி.க, திருகோணமலை)
கோல் காப்பாளர்கள்
மெஹமட் உஸ்மான் (ரினௌன் வி.க) – மஹேந்திரன் தினேஷ் (பொலிஸ் வி.க)