நட்புரீதியான போட்டிக்கு தயாராகும் இலங்கை கால்பந்து அணி

369
Image Courtesy - Facebook

இந்த வாரம் பிபா (பிபா) ஒருங்கிணைத்துள்ள சர்வதேச நட்புறவுப் போட்டியின் ஒரு பகுதியாக, இலங்கை கால்பந்து  அணி மியான்மாரை இரண்டு போட்டிகளில் எதிர்கொள்கிறது. 

இந்த போட்டிகளுக்கான வீரர்கள் கொண்ட குழாத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் இன்று (08) வெளியிட்டது 

இலங்கை U20 அணியில் இருந்து சலன சமீர, ரவுல் சுரேஷ் மற்றும் மொஹமட் தில்ஹாம் ஆகியோர் இந்த  போட்டிகளுக்கு தேசிய அணியில் சேர அழைக்கப்பட்டுள்ளனர். இந்த முக்கியமான போட்டிகளுக்கு இலங்கை தயாராகி வரும் நிலையில், அவர்களை இணைத்துக்கொள்வது புதிய ஆற்றலையும் திறமையையும் இலங்கை அணிக்கு கொண்டு வருகிறது. இந்த அணியின் பயிற்றுவிப்பாளராக அப்துல்லா அல்முட்டாரி செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியீட்ட அறிக்கையின் படி, இந்த அணிகள் மியான்மரின் யாங்கூனில் அக்டோபர் 10 மற்றும் 13 ஆம் திகதிகளில் மோத உள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணியின் குழாம்: 

சுஜன் பெரேரா (C), ஹர்ஷா பெர்னாண்டோ, மொஹமட் தில்ஹாம், அனுஜன் ராஜேந்திரம் ,சலன சமீர, வசீம் ரசீக், மொஹமட் அமன், ஒலிவர் கெளார்ட் , செனல் சந்தேஷ், கவீஷ் பெர்னாண்டோ, ஆதவன் ராஜமோகன், பரத் சுரேஷ்,ஜூட் சுபன், சகாயர்ட்ய ஸ்டிபன், மொஹமட் ஆகிப், லியோன் பெரேரா, மொஹமட் முர்ஷித் , வேட் டெக்கர், மொஹமட் காஸ்மீர், சாமுவேல் டூரென்ட்,  மொஹமட் ரிப்ஃகான், ராவுல் சுரேஷ், மனரம் பெரேரா

  >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<