2020 டி-20 உலகக் கிண்ண நேரடித் தகுதியை இழந்த இலங்கை அணி

2900

அவுஸ்திரேலியாவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னாள் சம்பியன் இலங்கை அணி 12 அணிகள் சுற்றுக்கு நேரடி தகுதி பெறத் தவறி இருப்பதோடு, பங்களாதேஷ் அணி உட்பட எட்டு அணிகளுடன் குழு நிலை சுற்று ஒன்றில் ஆட வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கை அணியின் புதிய தலைவராக லசித் மாலிங்க

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள….

அடுத்த டி-20 உலகக் கிண்ண போட்டியில் நேரடி தகுதி பெறும் அணிகள் விபரத்தை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் நேற்று வெளியிட்டது. 2018 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு உள்ள ஐ.சி.சி. டி-20 தரவரிசை அடிப்படையிலேயே இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த தொடருக்கு, நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோல் அடிப்படையில் போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியா மற்றும் தரவரிசையில் முதல் பத்து இடங்களில் இருக்கும் ஏனைய ஒன்பது அணிகள் நேரடி தகுதியை பெறும்.

எனினும், முதல் எட்டு அணிகள் நேரடியாக சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி விடும். எஞ்சிய இரண்டு அணிகளும் மேலும் ஆறு அணிகளுடன் சேர்ந்து குழுநிலை சுற்று ஒன்றில் ஆட வேண்டி ஏற்பட்டுள்ளது.

இதன்படி டி-20 தரவரிசையில் முறையே 9 மற்றும் 10 ஆவது இடங்களில் இருக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் 2019 டி-20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இருந்து தேர்வு பெறும் மேலும் ஆறு அணிகளுடன் அடுத்த சுற்றுக்காக மோதவுள்ளது. இந்த குழு நிலை சுற்றின் மூலம் நான்கு அணிகள் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.  

இலங்கை A கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த மொஹமட் சிராஸ்

சுற்றுலா அயர்லாந்து A கிரிக்கெட் ….

தரவரிசையில் முறையே முதல் எட்டு இடங்களில் இருக்கும் பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சுப்பர் 12 சுற்றுடனேயே தமது உலகக் கிண்ண போட்டிகளை ஆரம்பிக்கவுள்ளன.

எனினும், முன்னாள் சம்பியனும் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணியுமான இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் 2020 ஒக்டோபர் 18 தொடக்கம் நவம்பர் 15 வரை நடைபெறவிருக்கும் தொடரின் குழு நிலை போட்டியில் மேலும் ஆறு அணிகளுடன் ஆடவுள்ளன.  

கடந்த 2014 ஆம் ஆண்டு டி-20 உலக சம்பியனான இலங்கை நேரடியாக சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேற்றம் அடையாதது குறித்து இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார். எனினும் தமது அணி சிறப்பாக செயற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அண்மையை திறமைகள் மூலம் தாம் சவாலுக்கு நன்றாக தயாராவோம் என்று பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹஸன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

இது தொடர்பில் இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க கூறியதாவது, “நாம் சுப்பர் 12 சுற்றுக்கான தகுதியை உறுதி செய்யாதது சற்று ஏமாற்றமாக இருந்தபோதும் தொடரில் நாம் சிறப்பாக செயற்படுவோம் என்று நம்பிக்கை உள்ளது.

மூன்று இறுதிப் போட்டிகளில் ஆடியது மற்றும் ஒருமுறை வெற்றி பெற்றதை பார்க்கும்போது முதல் எட்டுக்குள் வரும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது இயற்கையானது. என்றாலும், குழுநிலையில் மேலதிக போட்டிகள் கொண்டு வாய்ப்புகளை பெற்று நொக் அவுட் போட்டிகளுக்காக நன்றாக தயாராவோம்.   

எம்மிடம் சில சிறந்த வீரர்கள் உள்ளனர் நேரம் வரும்போது எமது திறமையை நிரூபிப்பது மாத்திரமே விடயமாக உள்ளது. பெரிய போட்டிகளுக்கு தயாராகும் வகையில் எமக்கு வரும் சவால்களை எதிர்கொள்ளவிருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

அஞ்செலோ மெதிவ்ஸிற்கு பதிலாக இலங்கை அணியில் சதீர சமரவிக்ரம

உபாதைக்குள்ளாகியிருக்கும் இலங்கை அணியின் …..

பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹஸன் கூறியதாவது, “சுப்பர் 12 சுற்றுக்கு நாம் நேரடியாக தகுதி பெறாதபோதும் குழுநிலை போட்டிகளைக் கடந்து நாம் தொடரில் சிறப்பாக செயற்படுவோம் என்று நம்பிக்கையுடன் உள்ளோம்.

சிறந்த அணிகளை வீழ்த்தும் திறன் எமது அணிக்கு உள்ளது. தொடரில் முன்னேற்றம் காண முடியாமல் இருப்பதற்கு எந்தக் காரணத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. இதற்கு இன்னும் சற்று காலம் உள்ளது. டி-20 உலகக் கிண்ணத்திற்காக அதனை நாம் எம்மால் முடியுமான வரை பயன்படுத்துவோம்.

உலக சம்பியனான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தமது சொந்த மண்ணில் டி-20 தொடரை நாம் வெற்றி பெற்று நீண்டகாலம் இல்லை. அந்தத் திறமை எமது டி-20 திறனில் நம்பிக்கையை தந்தது’ என்றார்.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<