இந்திய கிரிக்கெட் அணியுடன் ஆடவுள்ள இலங்கை குழாம் வெளியீடு

2290
Getty Images

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களுக்கான 25 பேர் அடங்கிய இலங்கையின் வீரர்கள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதன்படி, தசுன் ஷானக்க தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் குழாம் இம்மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் சேர்த்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினையும்  இந்திய அணியுடன் விளையாடவுள்ளது. 

இலங்கை – இந்திய தொடர்களில் மீண்டும் திகதி மாற்றம்

இரு அணிகளும் பங்குபெறும் இந்த கிரிக்கெட் தொடர்கள் கடந்த 13ஆம் திகதியில் இருந்து நடாத்த ஏற்பாடு செய்யப்பட்ட போதும், இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப்பயிற்சியாளர் மற்றும் தரவு ஆய்வாளர் ஆகியோருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட காரணத்தினால் இந்த கிரிக்கெட் தொடர்கள் ஐந்து நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டு 18ஆம் திகதியில் இருந்து நடைபெறவிருக்கின்றன.  

இதேநேரம், இலங்கையின் உத்தியோகபூர்வ வீரரர்கள் குழாத்தில் உபாதைக்கு ஆளாகிய குசல் ஜனித் பெரேரா மற்றும் பினுர பெர்னாந்து ஆகிய வீரர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். எனினும், இதில் பினுர பெர்னாந்து இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, ஒருநாள் தொடரினை அடுத்து இம்மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகும் T20 தொடரில் பங்கேற்பார் எனக் கூறப்படுகின்றது. 

இந்திய தொடரிலிருந்து வெளியேற்றப்படும் குசல் பெரேரா!

அதேநேரம், கொவிட்-19 வைரஸ் தொடர்பான PCR பரிசோதனைகளுக்கு முகம்கொடுத்த மத்திய வரிசை அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷவும் வைரஸ் தொற்று இல்லாதது உறுதி செய்யப்பட்டதன் பின்னர் இலங்கை அணியில் இடம்பெற்றிருக்கின்றார். 

இந்த வீரர்கள் ஒரு பக்கமிருக்க லஹிரு குமார, கசுன் ராஜித போன்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் லஹிரு உதார, அஷேன் பண்டார போன்ற இளம் துடுப்பாட்டவீரர்களும், இலங்கையின் உத்தியோகபூர்வ வீரர்கள் குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.  

இலங்கையின் உத்தியோகபூர்வ குழாம் – தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா (பிரதி தலைவர்), குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னான்டோ, பானுக்க ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க, அஷேன் பண்டார, மினோத் பானுக்க, லஹிரு உதார, ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, சாமிக்க கருணாரட்ன, பினுர பெர்னான்டோ, துஷ்மன்த சமீர, லக்ஷான் சந்தகன், அகில தனன்ஞய,, தனன்ஞய லக்ஷான், இஷான் ஜயரட்ன, கசுன் ராஜித,, லஹிரு குமார, இசுரு உதான, ஷிரான் பெர்னான்டோ, அசித பெர்னான்டோ

தொடர் அட்டவணை 

ஒருநாள் தொடர் 

  • முதல் ஒருநாள் போட்டி – ஜூலை 18 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் – மாலை 3 மணி
  • இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூலை 20 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் – மாலை 3 மணி
  • மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூலை 23 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் – மாலை 3 மணி

T20 போட்டி 

  • முதல் T20 போட்டி – ஜூலை 25 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் – இரவு 8 மணி
  • இரண்டாவது T20 போட்டி – ஜூலை 27 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் – இரவு 8 மணி
  • மூன்றாவது T20 போட்டி – ஜூலை 29 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் – இரவு 8 மணி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு<<