பதான், கைபின் அதிரடியோடு இந்திய லெஜன்ட்ஸ் அணி வெற்றி

156

வீதி பாதுகாப்பு பற்றி அவதானம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் (Road Safety World Series) T20 கிரிக்கெட் தொடரில், இலங்கை லெஜன்ட்ஸ் அணியினை இந்திய லெஜென்ட்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது. 

இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் 16 பேர் கொண்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாம் …..

ஐந்து நாடுகளின் முன்னாள் நட்சத்திரங்கள் விளையாடும் இந்த T20 தொடரில், இலங்கை லெஜன்ட்ஸ் மற்றும் இந்திய லெஜன்ட்ஸ் அணிகள் மோதிய போட்டி மும்பை வங்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமானது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்தியத் தரப்பின் தலைவர் சச்சின் டெண்டுல்கர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கைத் தரப்பிற்கு வழங்கினார்.

தொடர்ந்து, நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக இந்த தொடரில் தமது முதல் மோதலில் அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணியை வீழ்த்திய இலங்கை லெஜன்ட்ஸ், துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.  

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த டில்ஷான் 23 ஓட்டங்கள் பெற, ஏனைய ஆரம்ப வீரர் ரொமேஷ் கலுவிதாரன 21 ஓட்டங்களையே பெற்றார்.  

இதனால், தொடக்கத்தில் சற்று தடுமாற்றம் காண்பித்த இலங்கை லெஜன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக, மத்தியவரிசையில் களம் வந்த சாமர கப்புகெதர 17 பந்துகளுக்கு 3 பெளண்டரிகள் அடங்கலாக 23 ஓட்டங்களை குவித்தார்.

இதேநேரம், இந்திய லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக, வேகப் பந்துவீச்சாளரான முனாப் பட்டேல் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 139 ஓட்டங்களை அடைவதற்கு இந்திய லெஜன்ட்ஸ் அணியினர் தமது பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்திய லெஜன்ட்ஸ் அணி இலங்கையின் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தமது முதல் 3 விக்கெட்டுக்களையும் 19 ஓட்டங்களுக்கு பறிகொடுத்து தடுமாறியது. வாஸின் பந்துவீச்சிற்கு இந்திய லெஜன்ட்ஸ் அணியின் விக்கெட்டுக்களாக மாறிய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் ஓட்டம் எதனையும் பெறாமல் வெளியேற, யுவ்ராஜ் சிங் ஒரு ஓட்டத்தினை மாத்திரம் பெற்றிருந்தார். இதேநேரம், ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்த விரேந்திர ஷேவாக் 3 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

எனினும், அடுத்து களம் வந்த மொஹமட் கைப், இர்பான் பதான் ஆகியோர் இந்திய லெஜன்ட்ஸ் அணிக்கு தமது பெறுமதியான துடுப்பாட்டம் மூலம் வலுச்சேர்த்தனர்.

இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு போட்டியின் வெற்றி இலக்கினை இந்திய லெஜன்ட்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களுடன் அடைந்தது.

இந்திய லெஜன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அரைச்சதம் விளாசிய இர்பான் பதான் 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை எடுத்தார். இதேநேரம், மொஹமட் கைப் 45 ஓட்டங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சமிந்த வாஸ் வெறும் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சாய்க்க, ரங்கன ஹேரத் மற்றும் சஜித்ர சேனநாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகன் விருதை, இந்திய  லெஜன்ட்ஸ் அணி வீரரான இர்பான பதான் வென்றார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை லெஜன்ட்ஸ் – 138/8 (20) சாமர கப்புகெதரே 23(17), முனாப் பட்டேல்  19/4(4)

இந்திய லெஜன்ட்ஸ் – 139/5 (18.4) இர்பான் பதான் 57(31), மொஹமட் கைப் 46(45), சமிந்த வாஸ் 05/2(3) 

முடிவு – இந்திய லெஜன்ட்ஸ்  5 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<