உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்கு ஆறு தொடர்கள்

9059

ஆரம்பத்தில் கிரிக்கெட் எனும் விளையாட்டு உருவாகும் போது டெஸ்ட் கிரிக்கெட் எனும் வடிவிலேயே உருவானது. ஒரு டெஸ்ட் போட்டியின் முடிவை காண்பதற்கு நான்கு, ஐந்து, ஆறு நாட்கள் தேவைப்பட்டன. 

இந்நிலையில் ஒரு போட்டியினுடைய முடிவை ஒரு நாளுக்குள் காண வேண்டும் என்ற அடிப்படையில் அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியானது ஒருநாள் சர்வதேச போட்டி எனும் பெயரில் உருவானது. இவ்வாறு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் நேரத்தின் பெறுமதி கருதி புதிய வடிவில் அணிக்கு 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியும் அறிமுகமானது

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

மயிரிழையில் உலகக் …….

கிரிக்கெட் விளையாட்டை இயக்குகின்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (.சி.சி) உலகக் கிண்ணம் என்ற பெயரில் ஒருநாள் போட்டிகளை உள்ளடக்கிய தொடர் ஒன்றையும், .சி.சி டி20 உலகக் கிண்ணம் என்ற பெயரில் டி20 போட்டிகளை உள்ளடக்கிய மற்றுமொரு தொடரையும் உலக கிரிக்கெட்டின் முக்கிய தொடர்களாக நடாத்தி வருகிறது

இந்நிலையில் மூவகையான போட்டிகளில் தவறவிடப்பட்ட டெஸ்ட் போட்டியையும் வைத்து ஒரு உலகக் கிண்ண தொடர் நடாத்துவதற்கு அண்மைகாலமாக .சி.சி ஏற்பாடுகளை மேற்கொண்டுவந்த நிலையில் தற்போது அதன் அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று (29) வெளியாகியுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்துஉலக டெஸ்ட் சம்பியன்ஷிப்எனும் பெயரில் டெஸ்ட் உலகக் கிண்ணம் ஆரம்பமாகின்றது.

உலகக் கிண்ணம் மற்றும் டி20 உலகக் கிண்ணத்தை போன்று குறிப்பிட்ட காலப்பகுதியில் நடைபெறும் தொடர் இல்லாமல் சற்று வித்தியாசமாக குறித்த டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது. டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள அணிகளில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய ஒன்பது அணிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கின்றன

இரண்டு வருடங்கள் நடைபெறவுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 27 தொடர்களை உள்ளடக்கி மொத்தமாக 71 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. குறித்த 27 டெஸ்ட் தொடர்கள் நிறைவு நிலையில் புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களில் காணப்படும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகள் முறைமை வெளியீடு

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி) எதிர்கால …….

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டிக்கான திகதி மற்றும் மைதானம் என்பன பின்னர் அறிவிக்கப்படும். இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி .சி.சி உலக டெஸ்ட் சம்பியனாக கருதப்படும்.   

டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 27 தொடர்களில் இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொடர்களுக்கும் பகிரப்படக்கூடிய புள்ளிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. (அனைத்தும் தொடரை மையப்படுத்தியே தரப்பட்டுள்ளது)

  •  2 போட்டிகள் கொண்ட தொடர்வெற்றி பெறும் அணிக்கு 60 புள்ளிகள், சமநிலையில் நிறைவடைந்தால் 30 புள்ளிகள், வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தால் 20 புள்ளிகள்  
  •  3 போட்டிகள் கொண்ட தொடர்வெற்றி பெறும் அணிக்கு 40 புள்ளிகள், சமநிலையில் நிறைவடைந்தால் 20 புள்ளிகள், வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தால் 13 புள்ளிகள்  
  • 4 போட்டிகள் கொண்ட தொடர்வெற்றி பெறும் அணிக்கு 30 புள்ளிகள், சமநிலையில் நிறைவடைந்தால் 15 புள்ளிகள், வெற்றி தோல்வியின் நிறைவடைந்தால் 10 புள்ளிகள்  
  •  5 போட்டிகள் கொண்ட தொடர்வெற்றி பெறும் அணிக்கு 24 புள்ளிகள், சமநிலையில் நிறைவடைந்தால் 12 புள்ளிகள், வெற்றி தோல்வியின் நிறைவடைந்தால் 8 புள்ளிகள் 

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வீரர்களுக்கான ஜேர்சி இலக்கம் விரைவில்

விளையாட்டு உலகைப் பொறுத்தமட்டில் ………

டெஸ்ட் சம்பின்ஷிப்பிற்காக நடைபெறவுள்ள 27 தொடர்களில் இலங்கை அணி நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுடன் ஆறு தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் பங்களாதேஷ் அணியுடன் மாத்திரம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் காணப்படுகின்றது. ஏனைய ஐந்து அணிகளுடனான தொடர்களும் இரண்டு போட்டிகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்கள்

  • இலங்கை எதிர் நியூசிலாந்து (2019)
  • இந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் (2019)
  •  இலங்கை எதிர் பாகிஸ்தான் (2019)
  •  இந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் (2019)
  •  அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான் (2019)
  •  பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ் (2020)
  •  நியூசிலாந்து எதிர் இந்தியா (2020)
  •  இலங்கை எதிர் இங்கிலாந்து (2020)
  •  பங்களாதேஷ் எதிர் அவுஸ்திரேலியா (2020)
  •  மேற்கிந்திய தீவுகள் எதிர் தென்னாபிரிக்கா (2020)
  •  பங்களாதேஷ் எதிர் நியூசிலாந்து (2020)
  •  நியூசிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள் (2020)
  •  நியூசிலாந்து எதிர் பாகிஸ்தான் (2020)
  •  இலங்கை எதிர் தென்னாபிரிக்கா (2021)
  •  பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா (2021)
  •  இலங்கை எதிர் மேற்கிந்திய தீவுகள் (2021)

பங்களாதேஷ் தொடரில் குலசேகரவை கெளரவிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் மற்றும் இலங்கை……..

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்கள் 

  • இந்தியா எதிர் தென்னாபிரிக்கா (2019)
  •  அவுஸ்திரேலியா எதிர் நியூசிலாந்து (2019-20)
  • இங்கிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள் (2020)
  •  இலங்கை எதிர் பங்களாதேஷ் (2020)
  •  இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் (2020)
  •  மேற்கிந்திய தீவுகள் எதிர் பங்களாதேஷ் (2021)
  •  தென்னாபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா (2021)

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்கள் 

  •  தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து (2019-20)
  •  அவுஸ்திரேலியா எதிர் இந்தியா (2020-21)

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்கள் 

  •  இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா (2019)
  •  இந்தியா எதிர் இங்கிலாந்து (2021)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<