இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிக்கும், பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் இடையில் பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரொன்றை நடத்துவது பற்றி இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் இந்திரானி ஆரியரத்ன ThePapare.com இணைத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில்,
”ஒக்டோபர் நடுப்பகுதியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒரு குறுகிய போட்டித் தொடரொன்றை நடத்துவதற்கான கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன, ஆனால், இந்தத் தொடர் நடைபெறுவது இதுவரை உறுதி செய்யப்படவில்லை” என தெரிவித்தார்.
எனவே, இருநாட்டு கிரிக்கெட் சபைகளுக்குமிடையிலான கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முடிந்து, இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி இந்தத் தொடரில் பங்குபற்றினால், இலங்கை பெண்கள் அணி 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டியாக இது அமையும்.
EMBERD LINKS
- இலங்கை வரும் பாகிஸ்தான் A மற்றும் பங்களாதேஷ் U19 அணிகள்
- இலங்கை A அணியின் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமனம்
- ஒக்டோபரில் ஆரம்பமாகவுள்ள இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள்
- இலங்கை U19 – பங்களாதேஷ் U19 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது
மேலும் இது 2022இல் நடைபெறவுள்ள பெண்கள் உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளுக்கு சிறந்த முறையில் தயாராவதற்கு இலங்கை பெண்கள் அணிக்கு உதவியாகவும் இருக்கும்.
முன்னதாக, அடுத்த மாதம் இங்கிலாந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாட திட்டமிட்டிருந்தது.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு தொடர்களையும் ரத்த செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…