ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ண தகுதிக்காண் போட்டிகளில் இலங்கை குழு B யில்

468

எதிர்வரும்  2018ஆம் அண்டு இடம்பெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதிகாண் சுற்றுக்கான அணிகளின் குழுத் தெரிவு (draw) மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பில் தலைமையகத்தில் இடம்பெற்றது. அதன்படி, இலங்கை அணி குழு B யில் மேலும் நான்கு அணிகளுடன் அங்கம் வகிக்கின்றது.

கத்துக்குட்டி அணியாக சம்பியன்ஸ் கிண்ணத்தில் நுழைவது மகிழ்ச்சியேமெதிவ்ஸ்

இந்த குழுத் தெரிவுக்குப் பின்னர், சம்பியன்ஷிப் போட்டிகளின் வெற்றியை எதிர்பார்த்துள்ள 43  ஆசிய அணிகளுக்கும் தங்கள் குழுவிலுள்ள எதிரணியை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரையில் ஆறு இறுதிப் போட்டிகளில் போட்டியிட்டிருந்த ஜப்பான் கால்பந்து அணி கடைசியாக 2016ஆம் ஆண்டும் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தது. அந்த வகையில் இம்முறை குழு I இல் இடம்பெற்றுள்ள அவ்வணி தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மொங்கோலிய அணிகளுடன் மோதவுள்ளது.

அதேநேரம், இலங்கை அணி தெற்காசிய நாடுகளான மாலைத்தீவுகள், பங்களாதேஷ் அணிகளுடன் சேர்த்து உஸ்பகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய அணிகளுடன் B குழுவில் மோதவுள்ளது.  

2016ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தை கைப்பற்றிய சவுதி அரேபியா, D குழுவில் இடம்பிடித்துள்ள ஏமன், துர்க்மெனிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுடன் மோதவுள்ளது. 2016ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய ஈரான் இஸ்லாமிய குடியரசு, E குழுவிலுள்ள பலஸ்தீன், ஜோர்தான் மற்றும் சிரிய அணிகளுடன் பலப்பரீட்சை நடாத்தவுள்ளது.  

அதேநேரம், பன்னிரண்டு தடவை போட்டியை வென்ற கொரிய குடியரசு, குழு F இல் இடம்பெற்றுள்ளது. இக்குழுவில் மலேசியா, டிமோர் லெஸெட், புரூனே தருசலாம்  மற்றும் இந்தோனேசிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன.

குழு மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடிக்கும் அணிகள், போட்டியை நடாத்தும் நாடுடன் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்படும். 19 வயதுக்குட்பட்ட ஆசிய சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டிகள் அனைத்தும் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.  

குழுக்களில் அங்கம் வகிக்கும் அணிகளின் விபரம்

மேற்கு பிராந்தியம்  
குழு A – பஹ்ரைன், ஐக்கிய அரபு இராட்சியம், ஓமான், நேபால், கிர்கிஸ் குடியரசு (போட்டியை நடாத்தும் நாடு)
குழு B – உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் (போட்டியை நடாத்தும் நாடு), பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவுகள்
குழு C – ஈராக், கட்டார் (போட்டியை நடாத்தும் நாடு), லெபனான், ஆப்கானிஸ்தான்
குழு D – சவுதி அரேபியா (போட்டியை நடாத்தும் நாடு), ஏமன், துர்க்மெனிஸ்தான், இந்தியா
குழு E  –  ஈரான் இஸ்லாமிய குடியரசு (போட்டியை நடாத்தும் நாடு), பாலஸ்தீனம், ஜோர்டான், சிரியா

கிழக்கு பிராந்தியம்  
குழு F – கொரிய குடியரசு (போட்டியை நடாத்தும் நாடு), மலேசியா, டிமோர் லெஸெட், புரூனே தருசலாம், இந்தோனேசியா
குழு G – சீனா , மியன்மார், பிலிப்பைன்ஸ், கம்போடியா (போட்டியை நடாத்தும் நாடு)
குழு H – வியட்நாம், லாவோஸ், சைனீஸ் தாய்பேய் , மக்காவு  
குழு I – ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், மங்கோலியா (போட்டியை நடாத்தும் நாடு)
குழு J – அவுஸ்திரேலியா, கொரியா, ஹொங் கொங், வடக்கு மரியானா தீவுகள்

Sri Lanka in AFC U19 Championship
Photo Courtesy – The AFC