எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள 16 வயதிற்குட்பட்ட ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகள் இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.
பொலிஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பாடும் மீன்
கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற FA கிண்ணத்தின் 32 அணிகளைக் கொண்ட சுற்றில்..
இத்தகுதிகாண் சுற்றுப் போட்டியில் மொத்தமாக 45 ஆசிய நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன. இவ்வணிகள் மேற்குப் பிராந்தியம் (23 அணிகள்) மற்றும் கிழக்குப் பிராந்தியம் (22 அணிகள்) என இரண்டு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பிராந்தியத்திலும் 5 குழுக்கள் காணப்படுகின்றன.
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற சம்பியன்ஷிப் தொடரின் தரவரிசைப்படி அணிகள் குழுக்களாக்கப்பட்டன. அத்தொடரில் பங்குபற்றாத அணிகள் குழுக்களில் இறுதியாக உள்ளடக்கப்பட்டன. போட்டிகளை நடாத்தும் நாடுகள் வெவ்வேறு குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரிக்கப்பட்டன. அதன்படி ஐந்து அணிகளை கொண்டுள்ள ஐந்து குழுக்களும் நான்கு அணிகளை கொண்டுள்ள ஐந்து குழுக்களும் காணப்படுகின்றன.
இத்தொடரில் முதல்முறையாக பங்கேற்கும் இலங்கை அணியானது உஸ்பெகிஸ்தான், சவுதி அரேபியா, ஜோர்தான், பஹ்ரைன் ஆகிய அணிகளுடன் குழு ‘A’இல் இடம்பிடித்துள்ளது. கடந்த 16 வயதிற்குட்பட்ட ஆசிய சம்பியன்ஷிப் தொடரில் உஸ்பெகிஸ்தான் 6ஆவது இடத்தையும், சவுதி அரேபியா 11 ஆம் இடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடப்புச் சம்பியனான ஈராக் மற்றும் இந்தியா, பலஸ்தீனம், நேபாளம் ஆகிய அணிகள் குழு ‘D’யிலும் கடந்த முறை இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட ஈரான் மற்றும் கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், லெபனான், பூட்டான் ஆகிய அணிகள் குழு ‘C’யிலும் போட்டியிடவுள்ளன.
இரு முறை சம்பியன் பட்டம் வென்ற அணியான வடகொரியா கடந்த முறை அரையிறுதிச் சுற்று வரை முன்னேறியிருந்ததுடன் அவ்வணியானது ஹொங் கொங், சைனீஸ் தாய்பேய், மக்காவு, ப்ருனை அணிகளுடன் குழு ‘F’ இல் காணப்படுகின்றன. மற்றுமொரு பிரபல அணியான ஜப்பான் அணியும் கடந்த தொடரில் அரையிறுதியுடன் வெளியேறியிருந்தது. அவ்வணி இம்முறை சிங்கப்பூர், மலேஷியா, குவாம் அணிகளுடன் குழு ‘J’யில் போட்டியிடுகின்றன.
FA கிண்ணத்தின் தமது முதல் போட்டியில் வெற்றியை சுவைத்த ரினௌன்
அளுத்கம ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த பருவகாலத்திற்கான FA கிண்ணத்தின் 32 அணிகளை..
குழுக்களில் முதல் இடங்களைப் பெற்றுக் கொள்ளும் பத்து (10) அணிகள், இரண்டாம் இடங்களை பெறும் அணிகளில் சிறந்த ஐந்து (5) அணிகள் மற்றும் போட்டியை நடாத்தும் அணி என 16 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறவுள்ளன.
மேற்குப் பிராந்தியம்
குழு A – உஸ்பகிஸ்தான், சவுதி அரேபியா (போட்டிகளை நடாத்தும் நாடு), ஜோர்தான், பஹ்ரைன், இலங்கை
குழு B – ஓமான், தஜிகிஸ்தான் (போட்டிகளை நடாத்தும் நாடு), சிரியா, துர்க்மெனிஸ்தான், மாலைதீவுகள்
குழு C – ஈரான் (போட்டிகளை நடாத்தும் நாடு), கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான்,லெபனான், பூட்டான்
குழு D – ஈராக், இந்தியா, பாலஸ்தீனம், நேபாளம் (போட்டிகளை நடாத்தும் நாடு)
குழு E – ஐக்கிய அரபு ராட்சியம், யெமன், கட்டார் (போட்டிகளை நடாத்தும் நாடு), Bangladeshகிழக்கு பிராந்தியம்
குழு F – வடகொரியா, ஹொங் கொங், சைனீஸ் தாய்பேய், மக்காவு, ப்ருனை
குழு G – தாய்லாந்து (போட்டிகளை நடாத்தும் நாடு), லாவோஸ், திமோர், வடக்கு மரியானா தீவுகள்இந்தோனேஷியா
குழு H – தென்கொரியா, சீனா, மியன்மார், பிலிப்பைன்ஸ்
குழு I – வியட்நாம், அவுஸ்திரேலியா, மொங்கோலியா (போட்டிகளை நடாத்தும் நாடு), கம்போடியா
குழு J – ஜப்பான், மலேஷியா, சிங்கப்பூர், குவாம்