தரங்கவுக்கு கொரோனா தொற்று; கண்காட்சி T20 போட்டி ஒத்திவைப்பு

194
UPUL THANRANGA

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் பதினொருவர் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையில் எதிர்வரும் 4ஆம் திகதி கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெறவிருந்த கண்காட்சி T20 போட்டியை ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

>> இலங்கை சிரேஷ்ட வீரர்களுக்கு எதிரான அணியில் சிராஸ், வியாஸ்காந்த்

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸுக்கு நிதி திரட்டும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபையினால் இலங்கையின் சிரேஷ் வீரர்கள் பதினொருவர் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையிலான கண்காட்சி T20 போட்டியொன்று எதிர்வரும் 4ஆம் திகதி கண்டி பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. 

நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சத்தால் மூடிய மைதானத்தில் குறித்த போட்டியை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனிடையே, குறித்த போட்டியில் விளையாடவிருந்த இலங்கை அணியில் இடம்பிடித்த ஒருசில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில். சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை சிரேஷ் வீரர்கள் அணியில் இடம்பிடித்த முன்னாள் வீரரான உபுல் தரங்க உள்ளிட்ட வீரர்களுக்கு நேற்றைய தினம் கொழும்பில் வைத்து PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

>> Video – DIMUTH இன் இரட்டைச் சதத்தால் முறியடிக்கப்பட்ட சாதனைகள்..!

இதன்படி, இன்றைய தினம் முடிவுகள் வெளியாகிய நிலையில். அதில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான உபுல் தரங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இலங்கையின் சிரேஷ் வீரர்கள் பதினொருவர் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையில் நடைபெறவிருந்த கண்காட்சி T20  போட்டியை ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது

இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்

இலங்கை சிரேஷ் வீரர்கள் அணி மற்றும் இலங்கை அணிக்கும் இடையில், மே 04ஆம் திகதி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த கண்காட்சி T20 போட்டி நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்திற்கொண்டு நடைபெறாது என்பதை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

>> LPL T20 தொடர் நான்கு மைதானங்களில் நடத்தப்படும்

கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்டி T20 போட்டியை நாட்டின் சுகாதார நிலைமை, வீரர்களின் பாதுகாப்பு என்பவற்றை அவதானித்து ஒத்திவைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது

எனவே, இந்தப் போட்டிக்காக தமது பங்குபற்றலை உறுதிப்படுத்தி விளையாட முன்வந்த முன்னாள் வீரர்கள், தற்போதைய வீரர்கள், அதிகாரிகள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை நன்றி தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிகப்கப்பட்டுள்ளது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<