எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு இலங்கை கால்பந்து குழாம் நீக்கப்பட்டதாக வெளியான அண்மைய ஊடகச் செய்திகளை இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) நிராகரித்துள்ளது.
2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்ல சாத்தியம் குறைந்த விளையாட்டுகளை நீக்குவதற்கு விளையாட்டு அமைச்சு திட்டமிட்டிருப்பதாக கடந்த வாரம் ஒருசில பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த விளையாட்டுப் போட்டியில் 27 விளையாட்டுகளில் இலங்கையின் 605 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
“தெற்காசிய விளையாட்டு விழா இலங்கை பங்கேற்கும் குறைந்த அளவு முக்கியத்துவம் கொண்ட விளையாட்டு போட்டிகளில் ஒன்று. இங்கே பதக்கம் வெல்ல முடியவில்லை என்றால் அதில் பங்கேற்பதில் அர்த்தமில்லலை என்றே நாம் கூறுகிறோம்” என்று விளையாட்டு அமைச்சின் அதிகாரி ஒருவர் கடந்த வாரம் பத்திரிகைகளுக்கு குறிப்பிட்டார்.
நாளை இலங்கை கால்பந்து அணியுடன் இணைகிறார் வசீம்
ஜேர்மனியில் தொழில்முறை கால்பந்து………….
“கோ-கோ போன்ற விளையாட்டுகளுக்கு 37 வீரர்கள் பங்கேற்கிறார்கள் ஆனால் பதக்கம் வெல்லும் வாய்ப்பு மிகக் குறைவு. ஒருசில விளையாட்டுகளை நாம் இவ்வாறு அடையாளம் கண்டிருக்கிறோம். கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் கால்பந்து அவைகளில் சில” என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் ThePapare.com இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் தலைவர் பாலேந்திர அரவிந்தை தொடர்புகொண்டு கேட்டபோது,
“இது பற்றி அமைச்சு எமக்கு எதுவும் கூறிவில்லை. சாக் போட்டிகளில் பங்கேற்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் நாம் செய்துள்ளோம். சாக் போட்டிகளுக்காக விரைவில் நாம் ஆடவர் மற்றும் மகளிர் குழாம்களை அனுப்புவோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் தெற்காசிய விளையாட்டு போட்டிக்கான இரு குழாம்களின் செலவுகளை FFSL அல்லது அமைச்சு ஆகிய இரு தரப்பில் யார் ஏற்பது என்ற கேள்விக்கு அவர் பதில் கூறத் தவறினார்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<