2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 23 வயதின் கீழ்ப்பட்ட ஆசிய கால்பந்து சம்மேளன (AFC) கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றுத் தொடருக்கு தெரிவு செய்யப்பட்ட, இலங்கையின் 23 வயதின் கீழ்ப்பட்ட கால்பந்து அணி வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> இலங்கை 23 வயதின் கீழ் பூர்வாங்க குழாம் அறிவிப்பு
அதன்படி இலங்கை 23 வயதின்கீழ்ப்பட்ட கால்பந்து அணி, ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தகுதிகாண் போட்டிகளில் A குழுவில் கட்டார், யெமன் மற்றும் சிரிய அணிகளுடன் மோதவுள்ளது.
மொஹமட் அமானுல்லாவின் பயிற்றுவிப்பில், இந்த தகுதிகாண் போட்டிகளுக்கு தயாராகியுள்ள இலங்கை 23 வயதின் கீழ்ப்பட்ட கால்பந்து அணியின் தலைவராக சசங்க டில்ஹாரவும், உப தலைவராக அசேல மதுஷானும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதேநேரம், இந்த தகுதிகாண் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்கள் முன்னர் இந்த தகுதிகாண் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட பூர்வாங்க குழாத்தில் காணப்பட்ட 33 வீரர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுதவிர இலங்கை 23 வயதுக்குட்பட்ட கால்பந்து அணியின் பயிற்றுவிப்புக்குழாத்தில் சமன் தயவன்ச, மார்கஸ் பெர்ரெய்ரா, மொஹமட் ஜுஸ்மின் மற்றும் முகாமையாளராக ஹிரான் ரத்நாயக்க ஆகியோர் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை 23 வயதுக்குட்பட்ட கால்பந்து குழாம்
- செனால் சந்தேஷ் – புளூ ஸ்டார் வி.க.
- டேனியல் மெக்ராத் கோமஸ் – புளூ ஸ்டார் வி.க.
- அப்துல் பாசித் – கொழும்பு கா.க,
- சபீர் ரசூனியா – கொழும்பு கா.க,
- ரிப்கான் மொஹமட் – டிபென்டர்ஸ் கா.க,
- நுவான் கிம்ஹான – டிபென்டர்ஸ் கா.க,
- சசங்க டில்ஹார – டிபன்டர்ஸ் கா.க (அணித்தலைவர்)
- பதுர்தீன் தஸ்லிம் – நியூ ஸ்டார் வி.க,
- சத்துரங்க பெர்னாண்டோ – நியூ யங்ஸ் வி.க,
- ருமேஷ் மெண்டிஸ் – நியூ யங்ஸ் வி.க,
- மொஹமட் முர்சித் – ரட்னம் வி.க,
- மொஹமட் முஷ்பிர் – ரினெளன் வி.க.,
- மொஹமட் அமான் – ரினெளன் வி.க,
- ரசா ரூமி – ரினெளன் வி.க,
- அசேல மதுஷான் – சீ ஹோக்ஸ் கா.க (பிரதி தலைவர்),
- உதயங்க பெரேரா – சீ ஹோக்ஸ் கா.க,
- மொஹமட் குர்ஷித் – சீ ஹோக்ஸ் கா.க,
- கன்னண் தேனுஷன் – உருத்திரபுரம் வி.க,
- யுவராசா தனுஷன் – உருத்திரபுரம் வி.க.
- விக்கும் அவிஷ்க – சீ ஹோக்ஸ் வி.க.
- சிஷான் பிரபுத்த – பொலிஸ் வி.க.
- ரசா ரூமி – ரினௌன் வி.க.
- லக்ஷான் தனன்ஞய – நியூ யங்ஸ் வி.க.
(வி.க. – விளையாட்டு கழகம், கா.க. – கால்பந்து கழகம்)
இலங்கை அணியின் போட்டிகள்
- ஒக்டோபர் 25ஆம் திகதி – இலங்கை எதிர் சிரியா
- ஒக்டோபர் 28ஆம் திகதி – இலங்கை எதிர் கட்டார்
- ஒக்டோபர் 31ஆம் திகதி – இலங்கை எதிர் யெமன்
>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<