முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்.

3196

நியூசிலாந்து அணியுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி பந்துவீசுவதற்கு தாமதமாகிய காரணத்தினால் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது இலங்கை அணிக்கும் அதன் தலைவர் லசித் மாலிங்கவுக்கும் அபராதம் விதித்துள்ளது. மேலும் ஐ.சி.சி யினால் லசித் மாலிங்கவுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து…

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு மூவகையான கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளிலும் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் நியூசிலாந்து அணி 1-0 எனுமடிப்படையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான அடுத்த தொடரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று (03) நியூசிலாந்தின் மௌண்ட் மங்கனூயில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 எனுமடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது. குறிந்த போட்டியில் இரு அணிகளும் 300 ஓட்டங்களுக்கு மேல் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் போது இலங்கை அணியினர் குறித்த நேரத்திற்குள் 50 ஓவர்களையும் வீச தவறிய காரணத்தினால் இலங்கை அணித்தலைவர் உட்பட ஏனைய பத்து வீரர்களுக்கும் .சி.சி யினால்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

.சி.சி இனுடைய இலக்கம் 2.22 சரத்தில் குறிப்பிடும், அணித் தலைவர்கள் மற்றும் வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின் படி இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அணியின் வீழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற வீரர்கள் காரணமில்லை ; மாலிங்க

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி…

50 ஓவர்கள் வீசுவதற்காக ஒரு அணிக்கு வழங்கப்பட்ட நேரத்தில் இலங்கை அணியால் 49 ஓவர்கள் மாத்திரமே வீச முடிந்தது. இதன் காரணமாக மீதியாக காணப்பட்ட ஒரு ஓவரையும் வீசுவதற்கு மேலதிக நேரம் தேவைப்பட்டிருந்தது.

குறித்த ஒரு ஓவரை வீச மேலதிக நேரம் எடுத்தமையினால், வீரர்களின் போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவீதம் என்ற அடிப்படையிலும், குறித்த அணியின் தலைவருக்கு அதன் இரட்டிப்பு அபராதம் என்ற அடிப்படையிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை அணியின் தலைவரான லசித் மாலிங்கவுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீத அபராத தொகையும், ஏனைய பத்து வீரர்களுக்கும் போட்டி ஊதியத்தில் 10 சதவீத அபராத தொகையும் .சி.சி யினால் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை குறித்த போட்டியின் கள நடுவர்களான கிரிஸ் பிரவுண், போல் வில்சன், மூன்றாம் நடுவர் ரிச்சட் இல்லிங்வேத் மற்றும் நான்காம் நடுவர் சவுன் ஹைக் ஆகியோர் உறுதிப்படுத்த, குறித்த போட்டியின் மத்தியஸ்தரான ரிச்சி ரிச்சட்சன் மூலமாக .சி.சி யினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டி முடிவடைந்ததன் பின்னர் இலங்கை அணித்தலைவவர் லசித் மாலிங்க குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் எதற்கும் அவர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் .சி.சி தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 12 மாதங்களுக்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள் இவ்வாறான குறைந்த பந்துவீச்சுப் பிரதி லசித் மாலிங்கவினால் பதிவு செய்யப்படுமானால் அவருக்கு போட்டித் தடை விதிக்கப்படும் என்பதையும் .சி.சி தெளிவுபடுத்தியுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளை மறுதினம் (05) இதே மைதானத்தில் பகலிரவு போட்டியாகவே நடைபெறவுள்ளது. இலங்கை அணிக்கு அடுத்த போட்டி தொடர் தோல்வியிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான மிக முக்கிமான போட்டியாகவும் அமைந்துள்ளது. குறித்த போட்டி இலங்கை நேரப்படி காலை 06.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<