18 வயதின் கீழ் கூடைப்பந்து அணிகள் இடையே நடைபெற்ற சர்வதேச கூடைப்பந்து சம்மேளன (FIBA) ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை ஆகியவை மோதிய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
>>2023 இலங்கையின் விளையாட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்திய பெண்கள்<<
FIBA ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் இலங்கை – இந்திய ஆகியவை மோதிய போட்டி தொடரின் இரண்டாவது மோதலாக அமைந்திருந்தது. தொடரின் முதல் போட்டியில் மாலைதீவுகள் 66-55 என பங்களாதேஷை வீழ்த்தியிருந்தது.
தொடர்ந்து கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் ஆரம்பித்த இலங்கை – இந்திய மோதலில் முதல் கால்பகுதியினை இந்தியா 21-9 எனக் கைப்பற்றியது. பின்னர் இரண்டாவது கால்பகுதியினையும் தமதாக்கிய இந்தியா போட்டியின் முதல் அரைப்பகுதியினை 40-22 என்கிற புள்ளிகள் அடிப்படையில் தமதாக்கியது.
பின்னர் போட்டியின் மூன்றாம் கால்பகுதியினையும் 61-39 எனக் கைப்பற்றிய இந்தியா, போட்டியின் இறுதிக் கால்பகுதியினையும் தமதாக்கி போட்டி முழுவதும் தமது முழு ஆதிக்கத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தினை 88-44 என்கிற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<