ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) ஏற்பாட்டியில் 2020ம் ஆண்டு நடைபெறவிருக்கும் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் கால்பந்து போட்டித் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கான குழு நிலைப்படுத்தும் குலுக்கல் நிகழ்வு நிறைவுக்கு வந்துள்ளது.
AFC இளையோர் சம்பியன்ஷிப் தகுதிகாண் தொடரில் இலங்கை B குழுவில்
ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) ஏற்பாட்டியில் 2020ம் ஆண்டு ……..
இதில், தெற்கு பிரிவு மற்றும் கிழக்கு பிரிவு என அணிகள் இரண்டு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளதுடன், இதில், தெற்கு பிரிவில் 25 அணிகளும், கிழக்கு பிரிவில் 22 அணிகளும் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை 16 வயதுக்குட்பட்டோர் அணி பலம் வாய்ந்த அணிகளுடன் A குழுவில் இடம்பெற்றுள்ளது.
தெற்கு பிரிவு (West Zone)
A குழுவில் இலங்கை அணியுடன் போட்டியை நடத்தும் நாடான தஜிகிஸ்தான், ஜோர்டான், நேபாளம் மற்றும் குவைட் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் குழுவுக்கான போட்டிகள் அனைத்தும் ஜோர்தானில் இடம்பெறவுள்ளன.
B குழுவில் உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், இந்தியா மற்றும் பஹ்ரைன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணி, ஜோர்டான் (0-7), சவூதி அரேபியா (0-10), உஸ்பெகிஸ்தான் (0-6) மற்றும் பஹ்ரைன் (0-6) ஆகிய அணிகளுடன் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், இம்முறையும் பலம் வாய்ந்த அணிகளுடன் மோதிகின்றது.
இதேவேளை, C குழுவில் ஈரான், பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலைத் தீவுகள் ஆகிய அணிகளும், D குழுவில் ஓமான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், E குழுவில் யெமன், பங்களாதேஷ், பூட்டான் மற்றும் கட்டார் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ள அதேவேளை, F குழுவில் ஈரான், கிர்கிஸ்தான், லெபனான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.
கிழக்கு பிரிவு (East Zone)
கிழக்கு பிரிவில், 2018ம் ஆண்டு காலிறுதிக்கு முன்னேறியிருந்த இந்தோனேசியா, இரண்டு தடவைகள் சம்பியனாகியிருந்த சீனா, பூரூனை, பிலிப்பைன்ஸ் மற்றும் வடக்கு மரியானா தீவுகள் ஆகிய அணிகள் G குழுவில் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம், H குழுவில் வியட்நாம் இடம்பெற்றுள்ளதுடன், இவர்களுடன் கிழக்குத் திமோர், மொங்கோலியா மற்றும் மக்கோவு ஆகிய அணிகள் குறித்த குழுவில் இடம் பிடித்துள்ளன. I குழுவில் 2 முறை சம்பியன் பட்டம் வென்ற வட கொரியா, ஹொங்கொங், சிங்கபூர் மற்றும் குவாம் ஆகிய அணிகள் பெயரிடப்படடுள்ளன.
கால்பந்து விதிகளில் பல மாற்றங்கள் அறிமுகம்
கால்பந்து விளையாட்டின் சட்ட விதிகளை தீர்மானிக்கின்ற சர்வதேச …………….
நடப்பு சம்பியன் ஜப்பான் J குழுவில் பெயரிடப்பட்டுள்ளதுடன், மலேசியா, லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய அணிகளும் குறித்த குழுவில் இடம்பிடித்துள்ளன. இறுதியாக K குழுவில் கொரிய குடியரசு, தாய்லாந்து, சீன தைபே மற்றும் மியான்மார் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, தகுதிகாண் முறைமைகளை பொருத்தவரை, தங்களுடைய குழுக்களில் முதலிடத்தை பெறும் அணிகள் நேரடியாக 2020ம் ஆண்டுக்கான 16 வயதுக்குட்பட்டோர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிபெறும் என்பதுடன், ஒவ்வொரு குழுக்களிலும் மிகச்சிறந்த முறையில் 2வது இடத்தை பிடித்துள்ள முதல் நான்கு அணிகளும் நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைக்கும்.
முக்கியமாக போட்டியை நடத்தும் அணி, குழுநிலையில் முதலிடத்தையோ அல்லது, குழுநிலையில் அதிசிறந்த இரண்டாவது இடத்தை பெறும் நான்கு அணிகளிலோ இடம்பெறுமாயின், மிகச்சிறந்த இரண்டாவது இடத்தை பெற்றிருக்கும் ஐந்தாவது அணிக்கு 2020ம் ஆண்டுக்கான 16 வயதுக்குட்பட்டோர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிபெறும் வாய்ப்பு கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகுதிகாண் தொடரில், 5 அணிகள் உள்ள குழுக்களுக்கான போட்டிகள் இவ்வருடம் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அதேவேளை, 4 அணிகள் உள்ள குழுக்களுக்கான போட்டிகள் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகும்.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<