சுற்றுலா அயர்லாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கவிருக்கும் எதிர்பார்ப்பு இலங்கை குழாம் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
வோர்னரின் போராட்டம் வீண்; டெல்லிக்கு ஹெட்ரிக் தோல்வி
அதன்படி மொத்தம் 15 பேர் கொண்ட இந்த டெஸ்ட் குழாத்தில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதில் இலங்கையின் கடைசி டெஸ்ட் சுற்றுப்பயணமான நியூசிலாந்து தொடரில் பங்கேற்ற விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் ஆரம்ப வீரர் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு வீரர்களும் இலங்கை அணிக்காக ஆடிய அண்மைய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதனை அடுத்தே டெஸ்ட் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகம் பெற்ற இளம் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான நிஷான் மதுஷ்க திமுத் கருணாரட்னவுடன் இணைந்து அயர்லாந்து தொடரில் ஆரம்ப வீரராக களமிறங்க எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேநேரம், உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்திய விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் சதீர சமரவிக்ரம, அறிமுக சுழல்வீரர் துஷான் ஹேமன்த ஆகியோருக்கு அயர்லாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோயல் செலஞ்சர்ஸ் அணியுடன் இணையும் தென்னாபிரிக்க வேக நட்சத்திரம்
அதேவேளை ரமேஷ் மெண்டிஸ், இடதுகை சுழல்வீரர் லசித் எம்புல்தெனிய ஆகியோர் இலங்கை டெஸ்ட் குழாத்தினுள் மீண்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
மறுமுனையில் அனுபவமிக்க வேகப் பந்துவீச்சாளர்களான லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோருக்கும் அயர்லாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.
இலங்கை – அயர்லாந்து அணிகள் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 16ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவிருப்பதோடு, இதுவே சர்வதேச அரங்கில் இரண்டு அணிகளும் விளையாடும் முதல் டெஸ்ட் தொடராகவும் காணப்படுகின்றது.
எதிர்பார்க்கை டெஸ்ட் குழாம்
திமுத் கருணாரட்ன (தலைவர்), தனன்ஞய டி சில்வா, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், நிஷான் மதுஷ்க, சதீர சமரவிக்ரம, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, மிலான் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், லசித் எம்புல்தெனிய, துஷான் ஹேமன்த
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<