Home Tamil முதல் நாளில் வலுவடைந்துள்ள தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி

முதல் நாளில் வலுவடைந்துள்ள தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி

287

சுற்றுலா இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மற்றும் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே நடைபெறும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின், முதல் நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி வலுப்பெற்றுள்ளது. 

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, தமது சுற்றுப் பயணத்தில் முதல் கட்டமாக உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டிகள் கொண்ட முக்கோண தொடரில் விளையாடியதை அடுத்து தற்போது, 2 போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. 

ஒரே அணியில் இணையும் கேன் வில்லியம்சன் மற்றும் பெய்லிஸ்

அந்தவகையில், இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மற்றும் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஆகியவை மோதும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (18) போச்சேப்ஸ்ரூம் நகரில் ஆரம்பமானது.

நான்கு நாட்கள் கொண்ட இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி மைதான ஈரலிப்பு காரணமாக சற்று தாமதமாகவே தொடங்கியது. இதனால், முதல் நாளில் குறைவான ஓவர்கள் வீசப்படும் நிலையே உருவாகியிருந்தது. 

பின்னர், போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற, தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியின் தலைவர் றய்னாட் வன் டொன்டர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தமது தரப்பிற்காக தெரிவு செய்து கொண்டார்.

அதன்படி முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணிக்கு ஜேன்மன் மலான் மற்றும் மெத்திவ் ப்ரிட்ஸ்கே ஜோடி அட்டகாசமான ஆரம்பத்தை கொடுத்தது. இந்த ஜோடி தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியின் முதல் விக்கெட்டுக்காக 145 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தது.

தொடர்ந்து தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியின் முதல் விக்கெட்டாக, ஜேன்மன் மலான் இலங்கை வளர்ந்துவரும் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மலான், ஆட்டமிழக்கும் போது 93 பந்துகளில் 12 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 75 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மஹேல பயிற்றுவிக்கும் அணியில் ஷேன் வொட்சன்

எனினும், களத்தில் நின்ற ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மெத்திவ் ப்ரிட்ஸ்கே, முதல் தரப் போட்டிகளில் பெற்ற கன்னி சதத்துடன் தனது தரப்பிற்கு வலுச்சேர்த்தார். தொடர்ந்து, சாமிக்க கருணாரத்னவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த மெத்திவ் ப்ரிட்ஸ்கே, 187 பந்துகளில் 10 பெளண்டரிகள் அடங்கலாக 114 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதன் பின்னர் தொடர்ந்து துடுப்பாடிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிக்கு, அதன் தலைவர் றய்னாட் வன் டொன்டர் அரைச்சதம் ஒன்றுடன் பலம் சேர்த்தார்.

embed – இந்த அரைச்சத உதவியோடு தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி, போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்சுக்காக 68 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 281 ஓட்டங்களை பெற்றிருந்தது.

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் சார்பில் அரைச்சதம் தாண்டிய றய்னாட் வான் டொன்டர் 67 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க சிபோனெலோ மக்னாயா 7 ஓட்டங்களுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் லசித் எம்புல்தெனிய, மொஹமட் சிராஸ் மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka Emerging Team
241/10 (60.5) & 302/10 (94.1)

South Africa Emerging Team
382/10 (99.2) & 189/10 (39.4)

Batsmen R B 4s 6s SR
Janneman Malan b Mohamed Shiraz 75 93 12 1 80.65
Matthew Breetzke c Minod Bhanuka b Chamika Karunarathne 114 187 10 0 60.96
Raynard van Tonder c Kamindu Mendis b Asitha Fernando 69 117 6 0 58.97
Jason Smith c Mohamed Shiraz b Lasith Embuldeniya 1 12 0 0 8.33
Sibonelo Makhanya c Minod Bhanuka b Nishan Peiris 22 42 2 0 52.38
Sinethemba Qeshile b Lasith Embuldeniya 20 34 3 0 58.82
Dayyaan Galiem lbw b Mohamed Shiraz 28 43 4 0 65.12
Kyle Simmonds lbw b Nishan Peiris 4 17 0 0 23.53
M Jansen c Charith Asalanka b Lasith Embuldeniya 3 8 0 0 37.50
Nandre Burger c Pathum Nissanka b Asitha Fernando 9 42 1 0 21.43
Tladi Bokako not out 14 6 2 1 233.33


Extras 23 (b 10 , lb 8 , nb 5, w 0, pen 0)
Total 382/10 (99.2 Overs, RR: 3.85)
Fall of Wickets 1-145 (33.1) Janneman Malan, 2-259 (61.6) Matthew Breetzke, 3-266 (64.5) Jason Smith, 4-288 (69.6) Raynard van Tonder, 5-318 (78.2) Sibonelo Makhanya, 6-328 (81.1) Sinethemba Qeshile, 7-339 (86.2) Kyle Simmonds, 8-348 (89.3) M Jansen, 9-368 (96.6) Dayyaan Galiem, 10-382 (99.2) Nandre Burger,

Bowling O M R W Econ
Asitha Fernando 18.2 3 63 2 3.46
Mohamed Shiraz 15 4 63 2 4.20
Lasith Embuldeniya 31 2 120 3 3.87
Chamika Karunarathne 11 1 40 1 3.64
Nishan Peiris 24 1 82 2 3.42
Batsmen R B 4s 6s SR
Minod Bhanuka c Raynard van Tonder b Kyle Simmonds 0 1 0 0 0.00
Hasitha Boyagoda lbw b Kyle Simmonds 40 52 7 0 76.92
Pathum Nissanka lbw b Tladi Bokako 7 5 1 0 140.00
Charith Asalanka b Kyle Simmonds 56 84 6 2 66.67
Ashen Bandara c Nandre Burger b Kyle Simmonds 10 14 1 0 71.43
Kamindu Mendis lbw b M Jansen 33 54 5 0 61.11
Chamika Karunarathne b Nandre Burger 27 49 5 0 55.10
Nishan Peiris not out 52 56 8 2 92.86
Lasith Embuldeniya lbw b M Jansen 0 2 0 0 0.00
Asitha Fernando b Nandre Burger 0 11 0 0 0.00
Mohamed Shiraz c & b Nandre Burger 12 37 2 0 32.43


Extras 4 (b 1 , lb 3 , nb 0, w 0, pen 0)
Total 241/10 (60.5 Overs, RR: 3.96)
Fall of Wickets 1-0 (0.1) Minod Bhanuka, 2-7 (1.2) Pathum Nissanka, 3-89 (16.5) Hasitha Boyagoda, 4-111 (24.1) Ashen Bandara, 5-116 (28.3) Charith Asalanka, 6-176 (42.6) Chamika Karunarathne, 7-176 (43.1) Kamindu Mendis, 8-176 (43.3) Lasith Embuldeniya, 9-185 (46.6) Asitha Fernando, 10-241 (60.5) Mohamed Shiraz,

Bowling O M R W Econ
Kyle Simmonds 19 4 88 4 4.63
Tladi Bokako 5 0 24 1 4.80
Nandre Burger 13.5 3 58 3 4.30
M Jansen 14 8 32 2 2.29
Dayyaan Galiem 8 1 28 0 3.50
Matthew Breetzke 1 0 7 0 7.00
Batsmen R B 4s 6s SR
Janneman Malan c Nishan Peiris b Asitha Fernando 1 2 0 0 50.00
Matthew Breetzke lbw b Lasith Embuldeniya 14 35 1 0 40.00
Jason Smith b Lasith Embuldeniya 2 11 0 0 18.18
Sibonelo Makhanya c Minod Bhanuka b Lasith Embuldeniya 5 4 1 0 125.00
Sinethemba Qeshile lbw b Chamika Karunarathne 31 38 7 0 81.58
Raynard van Tonder lbw b Nishan Peiris 17 48 1 0 35.42
Dayyaan Galiem lbw b Lasith Embuldeniya 0 3 0 0 0.00
Kyle Simmonds c Minod Bhanuka b Asitha Fernando 50 44 5 2 113.64
M Jansen b Lasith Embuldeniya 49 44 7 2 111.36
Nandre Burger c Hasitha Boyagoda b Asitha Fernando 16 12 2 0 133.33
Tladi Bokako not out 0 0 0 0 0.00


Extras 4 (b 0 , lb 1 , nb 3, w 0, pen 0)
Total 189/10 (39.4 Overs, RR: 4.76)
Fall of Wickets 1-2 (0.5) Janneman Malan, 2-14 (5.1) Jason Smith, 3-20 (5.6) Sibonelo Makhanya, 4-29 (9.6) Matthew Breetzke, 5-62 (18.4) Sinethemba Qeshile, 6-63 (19.4) Dayyaan Galiem, 7-86 (25.2) Raynard van Tonder, 8-151 (34.6) Kyle Simmonds, 9-183 (38.6) Nandre Burger, 10-189 (39.4) M Jansen,

Bowling O M R W Econ
Asitha Fernando 9 0 47 3 5.22
Lasith Embuldeniya 15.4 2 74 5 4.81
Chamika Karunarathne 6 2 16 1 2.67
Mohamed Shiraz 3 0 12 0 4.00
Nishan Peiris 6 0 39 1 6.50


Batsmen R B 4s 6s SR
Hasitha Boyagoda c Sibonelo Makhanya b Kyle Simmonds 33 49 7 0 67.35
Minod Bhanuka c Sinethemba Qeshile b Tladi Bokako 89 134 12 0 66.42
Pathum Nissanka c Sinethemba Qeshile b Dayyaan Galiem 47 117 3 1 40.17
Charith Asalanka b M Jansen 9 17 0 0 52.94
Ashen Bandara c Sinethemba Qeshile b Tladi Bokako 1 6 0 0 16.67
Kamindu Mendis lbw b Nandre Burger 17 31 2 0 54.84
Chamika Karunarathne lbw b Nandre Burger 10 22 1 0 45.45
Nishan Peiris b Nandre Burger 25 57 2 0 43.86
Mohamed Shiraz c Sinethemba Qeshile b M Jansen 49 96 7 0 51.04
Lasith Embuldeniya c Sinethemba Qeshile b Tladi Bokako 7 35 1 0 20.00
Asitha Fernando not out 0 4 0 0 0.00


Extras 15 (b 8 , lb 4 , nb 3, w 0, pen 0)
Total 302/10 (94.1 Overs, RR: 3.21)
Fall of Wickets 1-74 (15.6) Hasitha Boyagoda, 2-159 (42.3) Minod Bhanuka, 3-170 (47.1) Charith Asalanka, 4-173 (48.6) Ashen Bandara, 5-201 (57.2) Pathum Nissanka, 6-207 (60.6) Kamindu Mendis, 7-214 (62.5) Chamika Karunarathne, 8-272 (80.6) Nishan Peiris, 9-302 (93.2) Mohamed Shiraz, 10-302 (94.1) Lasith Embuldeniya,

Bowling O M R W Econ
Nandre Burger 16 7 38 3 2.38
Tladi Bokako 21.1 4 70 3 3.32
Dayyaan Galiem 15 2 37 1 2.47
M Jansen 17 2 58 2 3.41
Kyle Simmonds 22 0 74 1 3.36
Sibonelo Makhanya 3 0 13 0 4.33



போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்