Home Tamil வனிந்து ஹசரங்க சகலதுறையில் அசத்த இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு அபார வெற்றி

வனிந்து ஹசரங்க சகலதுறையில் அசத்த இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு அபார வெற்றி

3990
SL Emerging tour of Bangladesh

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியானது இருதரப்பு தொடருக்காக தற்சமயம் பங்களாதேஷூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் போன்ற இரு தொடரில் இலங்கை வளர்ந்துவரும் அணி விளையாடவுள்ளது. 

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இன்று (18) நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை வளர்ந்துவரும் அணி 186 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. கிரிரா ஷிக்கா புரோடிஸ்தான் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை வளர்ந்துவரும் அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

தமது டெஸ்ட் கோட்டையில் இலங்கைக்கு வரலாற்று வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு………….

அதன்படி முதலில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் சந்துன் வீரக்கொடி ஜோடி 48 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது. பெத்தும் நிஸ்ஸங்க 18 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். அடுத்த இரண்டு ஓவர்களுக்குள் சந்துன் வீரக்கொடியும் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 59 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டன. 

மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் சரித் அசலங்க மற்றும் சம்மு அஷான் ஜோடி 85 ஓட்டங்களை பகிர்ந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சேர்த்தது. நிதானமாக பந்துகளை தடுத்தாடிய சம்மு அஷான் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் நிதானமாக துடுப்பாடிய அணித்தலைவர் சரித் அசலங்க அரைச்சதம் கடந்து 71 ஓட்டங்களை பெற்றவேளையில் ஆட்டமிழந்தார். 

முறுமுனையில் துடுப்பெடுத்தாடிய சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார். ஆறாமிலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க அதிரடியாக துடுப்பெடுத்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது. 46 பந்துகளை எதிர்கொண்ட வனிந்து ஹசரங்க 3 சிக்ஸர்கள் 7 பௌண்டரிகள் உள்ளடங்களாக 70 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

பின்னர் இறுதி ஓவரில் ஜெஹான் டானியல் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அஷேன் பண்டாரா அதிரடியாக 29 ஓட்டங்களுடனும், ஷிரான் பெர்னாண்டோ 2 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தில் இருந்தனர். 

ட்விட்டரில் கொண்டாடப்படும் இலங்கை அணியின் வரலாற்று வெற்றி

கடந்த புதன்கிழமை (14) காலி சர்வதேச……….

பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சில் சபிகுல் இஸ்லாம் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், சஹிதுல் இஸ்லாம் 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், அபிப் ஹூஸைன், அமினுல் இஸ்லாம் மற்றும் யாசின் அறபாத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். 

305 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி மூன்றாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. அதனை தொடர்ந்து ஐந்தாவது, எட்டாவது ஓவர்களில் முறையே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. பின்னர் நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக 33 ஓட்டங்கள் பகிரப்பட்ட வேளையில் அந்த இணைப்பட்டம் வீழ்த்தப்பட்டது. 

மீண்டும் அடுத்த பந்தில் அடுத்த விக்கெட் வீழ்த்தப்பட பங்களாதேஷ் அணி 82 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி 104 ஓட்டங்களை பெற்ற வேளையில் அடுத்த விக்கெட் வீழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஏழாவது, எட்டாவது விக்கெட்டுக்கள் அடுத்தடுத்த பந்துகளில் 26 ஆவது ஓவரிலும், ஒன்பதாவது பத்தாவது விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி 28.3 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. 

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சைப் ஹஸ்ஸான் மாத்திரம் நிலைத்து நின்று 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மேலும் அபிப் ஹூஸைன் 19 ஓட்டங்களையும், மஹிதுல் இஸ்லாம் 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில், துடுப்பாட்டத்திலும் கலக்கிய வனிந்து ஹசரங்க பந்துவீச்சிலும் கலக்கி 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். மேலும் நுவன் துஷார, அமில அபொஸோ மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர். 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கையின் திட்டம் பற்றி திமுத் விளக்கம்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக…….

போட்டியின் ஆட்ட நாயகனாக சகலதுறையில் பிரகாசித்த வனிந்து ஹசரங்க தெரிவானார். இவ்வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (21) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Result


Sri Lanka Emerging Team
304/7 (50)

Bangladesh Emerging Team
118/10 (28.3)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Shafiqul Islam 18 18 3 0 100.00
Sandun Weerakkody b Shafiqul Islam 31 24 5 0 129.17
Charith Asalanka c Saif Hassan b Afif Hossain 71 79 7 2 89.87
Sammu Ashan b Aminul Islam 33 70 4 0 47.14
Kamindu Mendis c Najmul Hossain Shanto b Yeasin Arafat 28 40 1 0 70.00
Wanindu Hasaranga c Mohammad Naim b Shahidul Islam 70 46 7 3 152.17
Ashen Bandara not out 29 17 3 1 170.59
Jehan Daniel c Mahidul Islam Ankon b Shahidul Islam 8 6 1 0 133.33
Shiran Fernando not out 2 2 0 0 100.00


Extras 14 (b 0 , lb 1 , nb 2, w 11, pen 0)
Total 304/7 (50 Overs, RR: 6.08)
Fall of Wickets 1-48 (6.1) Pathum Nissanka, 2-59 (8.1) Sandun Weerakkody, 3-144 (28.6) Sammu Ashan, 4-172 (35.2) Charith Asalanka, 5-226 (42.6) Kamindu Mendis, 6-274 (47.5) Wanindu Hasaranga, 7-289 (49.1) Jehan Daniel,

Bowling O M R W Econ
Shahidul Islam 10 0 71 2 7.10
Yeasin Arafat 10 0 89 1 8.90
Shafiqul Islam 7 1 22 2 3.14
Nayeem Hasan 10 1 50 0 5.00
Afif Hossain 5 0 28 1 5.60
Aminul Islam 8 0 43 1 5.38


Batsmen R B 4s 6s SR
Saif Hassan c Charith Asalanka b Wanindu Hasaranga 50 70 6 0 71.43
Mohammad Naim c Sandun Weerakkody b Shiran Fernando 5 5 1 0 100.00
Najmul Hossain Shanto c & b Shiran Fernando 8 9 1 0 88.89
Yasir Ali c Sandun Weerakkody b Nuwan Thushara 0 11 0 0 0.00
Afif Hossain lbw b Amila Aponso 19 33 3 0 57.58
Aminul Islam b Amila Aponso 0 1 0 0 0.00
Mahidul Islam Ankon c Pathum Nissanka b Wanindu Hasaranga 10 21 1 0 47.62
Nayeem Hasan c Sandun Weerakkody b Wanindu Hasaranga 1 8 0 0 12.50
Shahidul Islam b Wanindu Hasaranga 0 1 0 0 0.00
Yeasin Arafat c Ashen Bandara b Nuwan Thushara 1 12 0 0 8.33
Shafiqul Islam not out 0 0 0 0 0.00


Extras 24 (b 4 , lb 0 , nb 0, w 20, pen 0)
Total 118/10 (28.3 Overs, RR: 4.14)
Fall of Wickets 1-18 (2.3) Mohammad Naim, 2-38 (4.5) Najmul Hossain Shanto, 3-49 (7.5) Yasir Ali, 4-82 (16.1) Afif Hossain, 5-82 (16.2) Aminul Islam, 6-104 (23.4) Mahidul Islam Ankon, 7-112 (25.1) Nayeem Hasan, 8-112 (25.2) Shahidul Islam, 9-118 (27.6) Saif Hassan, 10-118 (28.3) Yeasin Arafat,

Bowling O M R W Econ
Shiran Fernando 6 2 28 2 4.67
Jehan Daniel 2 0 22 0 11.00
Nuwan Thushara 4.3 0 21 2 4.88
Amila Aponso 7 0 25 2 3.57
Kamindu Mendis 3 1 6 0 2.00
Wanindu Hasaranga 6 3 12 4 2.00



முடிவு – இலங்கை வளர்ந்துவரும் அணி 186 ஓட்டங்களினால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<