தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் 2 நான்கு நாட்கள் போட்டித் தொடர்களில் விளையாடவுள்ள இலங்கை வளர்ந்து வருவோர் அணிக் குழாம்களை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (11) அறிவித்துள்ளது.
இலங்கை தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணிகளுக்கிடையிலான போட்டி அட்டவணை வெளியீடு
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வளர்ந்துவரும்…
இலங்கை வளர்ந்து வருவோர் அணி இம்மாத இறுதியில் தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு செல்லவிருக்கும் இலங்கை வளர்ந்து வரும் அணி, தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு எதிராக 2 நான்கு நாட்கள் போட்டியில் பங்கேற்பதுடன், தென்னாபிரிக்கா வளர்ந்து வரும் அணி மற்றும் தென்னாபிரிக்கா விளையாட்டு பல்கலைக்கழக அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளது.
குறித்த தொடர்களுக்கான இரண்டு குழாம்களை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு குழாம்களினதும் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய அணியின் வீரர்கள் சிலரும் இக்குழாம்களில் இடம்பிடித்துள்ளனர்.
அதன்படி, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது விரல் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த லசித் எம்புல்தெனிய, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் குழுாத்தில் இடம்பிடித்திருந்த மொஹமட் சிராஸ் மற்றும் இலங்கை அணிக்காக கடந்த காலங்களில் விளையாடியிருந்த சாமிக்க கருணாரத்ன, கமிந்து மெண்டிஸ், அசித பெர்னாண்டோ, அமில அபோன்சோ, லஹிரு மதுசங்க மற்றும் சந்துன் வீரக்கொடி ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
நாடு திரும்புகிறார் லசித் மாலிங்க
இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று (11)…
இவர்களில் மொஹமட் சிராஸ், அண்மையில் இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு சென்று வரலாற்று வெற்றி பெற்ற இலங்கை குழாமில் இணைக்கப்பட்டதன்மூலம் முதல் முறை தேசிய அணிக்கான வரத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இந்த குழாத்தில் புனித தோமையார் கல்லூரியின் இளம் வேகப் பந்துவீச்சாளர், கலன பெரேரா முதன் முறையாக இலங்கை வளர்ந்து வரும் குழாத்தில் இடம்பிடித்துள்ளார். கலன பெரேரா இதற்கு முன்னர் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகள், 19 வயதுக்குட்பட்டோர் தேசிய அணி மற்றும் அயர்லாந்து A அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை பதினொருவர் அணிக்காக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, தற்பொழுது இலங்கை 19 வயதின்கீழ் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்துள்ள இடதுகை வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்கவும் இந்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். ஹுங்கம விஜயபா மத்திய கல்லூரி வீரரான இவர் அண்மையில் பாகிஸ்தான் 19 வயதின்கீழ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகளை (08) வீழ்த்திய வீரராகவும் பதிவானார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு டில்ஷான் கூறும் அறிவுரை
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமாக செயற்பட, நடைபெறவிருக்கும்…
நான்கு நாள் போட்டிகளுக்கான இலங்கை வளர்ந்து வரும் குழாம்
லஹிரு உதார, ஹசித போயகொட, பெதும் நிசாங்க, மினோத் பானுக, சரித் அசலங்க (தலைவர்), கமிந்து மெண்டிஸ், கலன பெரேரா, மொஹமட் சிராஸ், ஜெஹான் டேனியல், அசித பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய, நிசான் பீரிஸ், பிரமோத் மதுவந்த, அசேன் பண்டார
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை வளர்ந்து வரும் குழாம்
சந்துன் வீரக்கொடி, பெதும் நிசாங்க, மினோத் பானுக, சரித் அசலங்க (தலைவர்), சம்மு அசான், கமிந்து மெண்டிஸ், அசேன் பண்டார, சாமிக்க கருணாரத்ன, அசித பெர்னாண்டோ, கலன பெரேரா, டில்ஷான் மதுசங்க, லஹிரு மதுசங்க, அமில அபோன்சோ, ரமேஷ் மெண்டிஸ், சங்கீத் குரே
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<