இலங்கை வளர்ந்து வரும் அணி தென்னாபிரிக்கா பயணம்

1084

முத்தரப்பு தொடர் மற்றும் இரண்டு 4 நாள் போட்டிகள் உட்பட ஒரு மாத கால சுற்றுப்பயணமாக சரித் அசலங்க தலைமையிலான இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் குழாம் இன்று (26) தென்னாபிரிக்கா பயணமாகிறது.  

இந்த சுற்றுப்பயணம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முகாமையாளர்/ சுற்றுப்பயண தேர்வாளர் ஹேமன்த விக்ரமரத்ன, பயிற்சியாளர் சமிந்த வாஸ் மற்றும் தலைவர் சரித் அசலங்க ஆகியோர் கருத்து வெளியிட்டனர். தென்னாபிரிக்க சுற்றுப்பயண போட்டிகள் வரும் ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தென்னாபிரிக்கா செல்லும் இலங்கை வளர்ந்து வரும் அணியில் சிராஸ்

தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப் ………

இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு இதற்கு முன்னரும் தலைமை வகித்திருக்கும் 21 வயதுடைய அசலங்க கூறும்போது, “தென்னாபிரிக்காவில் ஆடும் பெறுமதி மிக்க வாய்ப்பை இந்த இளம் குழாத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபை தந்துள்ளது. எனவே, இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தி தொடரை வெல்வோம். தென்னாபிரிக்கா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எனது தலைமையின் கீழ் நாம் சிறப்பாக செயற்பட்டோம். அதனையே செய்ய நாம் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார். 

உபாதை காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்னரே அசலங்க அணிக்கு திரும்பியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற வளர்ந்து வரும் அணிகளின் ஆசிய கிண்ண தொடரின்போது கடந்த டிசம்பரில் முழங்கால் உபாதைக்கு உள்ளான அவர் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். 

இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தலைமை பயிற்சியாளர் சமிந்த வாஸ் கூறியதாவது, “இது சமநிலையான ஒரு அணி. இரண்டு விக்கெட் காப்பாளர்கள் உட்பட எட்டு துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் துடுப்பாட்ட சகலதுறை வீரர்கள் உட்பட ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு வலது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டாக அணி உள்ளது” என்றார்.

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட வீரர் டில்ஷான் மதுஷங்க இணைக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதில் கூறிய தலைமை பயிற்சியாளர் சமிந்த வாஸ், “19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணம் இதே நாட்டில் நடைபெறவிருக்கும் நிலையில் டில்ஷான் மதுஷங்கவை எம்முடன் அழைத்துச் செல்வது குறித்து தேர்வுக் குழுவினருடன் நான் பேசினேன். உலகக் கிண்ணத்திற்கு முன்னர் அந்த சூழலில் தனது திறமையை சோதித்துப் பார்ப்பதற்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். அவருக்கு நல்லதொரு எதிர்காலம் உள்ளது” என்றார்.   

தொடருக்கான குழாம்கள் வருமாறு,

ஒருநாள் குழாம்

சரித் அசலங்க (தலைவர்), சந்துன் வீரக்கொடி, பத்தும் நிசங்க, சங்கீத் குரே, மினோத் பானுக்க, சம்மு அஷான், கமிந்து மெண்டிஸ், அஷேன் பண்டார, சாமிக்க கருணாரத்ன, அசித்த பெர்னாண்டோ, கலன பெரேரா, டில்ஷான் மதுஷங்க, லஹிரு மதுசங்க, அமில அபொன்சோ, ரமேஷ் மெண்டிஸ் 

Photo Album : Departure Media Briefing of the Sri Lanka Emerging Team to South Africa

நான்கு நாள் போட்டிக்கான குழாம்

சரித் அசலங்க (தலைவர்), பத்தும் நிசங்க, ஹசித்த போயகொட, மினோத் பானுக்க, லஹிரு உதார, பிரமோத் மதுவன்த, கமிந்து மெண்டிஸ், அஷேன் பண்டார, சாமிக்க கருணாரத்ன, அசித்த பெர்னாண்டோ, கலன பெரேரா, ஜெஹான் டானியல், மொஹமட் சிராஸ், லசித் எம்புல்தெனிய, நிஷான் பீரிஸ் 

போட்டி அட்டவணை

முத்தரப்பு தொடர்

  • ஜூன் 29: தென்னாபிரிக்கா எதிர் இலங்கை – கிரோகிளுப் ஓவல்
  • ஜூன் 30: தென்னாகிரிக்கா எதிர் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழகம் – கிரோகிளுப் ஓவல்
  • ஜூலை 01: இலங்கை எதிர் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழகம் – கிரோகிளுப் ஓவல்
  • ஜூலை 4: தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழகம் – தென்னாபிரிக்கா – டுக்ஸ் ஓவல்
  • ஜூலை 5:  தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழகம் – இலங்கை – டுக்ஸ் ஓவல்
  • ஜூலை 6:  தென்னாபிரிக்கா – இலங்கை – டுக்ஸ் ஓவல்
  • ஜூலை 9: இலங்கை எதிர் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழகம் – கிரோகிளுப் ஓவல்
  • ஜூலை 10: இலங்கை எதிர் தென்னாபிரிக்கா – கிரோகிளுப் ஓவல்
  • ஜூலை 11: தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழகம் எதிர் தென்னாபிரிக்கா – கிரோகிளுப் ஓவல்
  • ஜூலை 14: இறுதிப் போட்டி – டுக்ஸ் ஓவல்

நான்கு நாள் போட்டிகள்

  • ஜூலை 18 – 21 – தொன்னாபிரிக்கா – இலங்கை – சென்வெஸ் பார்க்
  • ஜூலை 25 – 28 – தென்னாபிரிக்கா எதிர் இலங்கை – டுக்ஸ் ஓவல்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<