ஜப்பான் மற்றும் இலங்கை வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஜப்பான் தொடருக்கான இலங்கை வளர்ந்துவரும் குழாத்தின் விபரங்களை எமது இணையத்தளத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை (4) குறித்த குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி துடுப்பாட்டத்துடன் பஞ்சாபை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்
இந்த குழாத்தின் அணித்தலைவராக டெலோன் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே குறிப்பிட்டது போன்று யாழ். வீரர் தீசன் விதுசன் அணியில் இடம்பிடித்துள்ளார். இவருடன் கொழும்பு சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த இம்தியாஸ் ஷ்லாஷாவும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை வளர்ந்துவரும் குழாமானது எதிர்வரும் 8ஆம் திகதி ஜப்பான் நோக்கி புறப்படவுள்ளதுடன், மே 10ஆம் திகதி முதல் T20 போட்டி ஆரம்பமாகவுள்ளது. அதனைத்தொடர்ந்து 11, 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் எஞ்சிய போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வளர்ந்துவரும் குழாம்
சகுன லியனகே, துனித் ஜயதுங்க, சஹில் டயஸ், ரன்மித் ஜயசேன, செஹான் பெர்னாண்டோ, யொஹான் லியனகே, ஹிரந்த ஜயசிங்க, சித்தார அபுஹின்ன, டெலோன் பீரிஸ், லக்ஷான் கமகே, தீசன் விதுசன், இம்தியாஷ் ஷ்லாஷா, சிதும் திசாநாயக்க, ஹர்ஷன விக்மரசிங்க, தனால் ஹேமந்த
போட்டி அட்டவணை
திகதி | போட்டி | மைதானம் |
மே 10 | முதல் T20 | சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானம் |
மே 11 | 2வது T20 | சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானம் |
மே 13 | 3வது T20 | சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானம் |
மே 14 | 4வது T20 | சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானம் |
மே 15 | 5வது T20 | சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானம் |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<