உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை

2248

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய (30) போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், இலங்கை அணி தங்களுடைய அறையிறுதி வாய்ப்பை இழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த உலகக் கிண்ணத்தின் 38 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு பிறகு இலங்கை அணி நான்காவது அணியாக உலகக் கிண்ண குழுநிலை போட்டிகளுடன் வெளியேறியுள்ளது. 

இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை அதிகரித்த இங்கிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 38ஆவது …..

இலங்கை அணி இதுவரையில் 7 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளை மாத்திரம் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளை வெற்றிக்கொண்டிருந்ததுடன், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகள் சீரற்ற காலநிலை காரணமாக முடிவற்ற போட்டிகளாக அறிவிக்கப்பட, அதன் மூலம் இரண்டு புள்ளிகளை பெற்றது.

எனினும், இலங்கை அணி மீதமிருக்கின்ற 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் 10 புள்ளிகளை பெற்று இங்கிலாந்து அணியின் புள்ளிகளை சமப்படுத்த முடியும் என்ற வாய்ப்பு இருந்தாலும், வெற்றிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி (5 வெற்றிகள்) முன்னிலையில் உள்ளதால் இலங்கை அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. 

இலங்கை அணியானது தங்களுடைய அடுத்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இன்று எதிர்கொள்ளவுள்ளதுடன், எதிர்வரும் 6ம் திகதி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள போதும், இந்தப் போட்டிகளில் தங்களுடைய பலத்தை நிரூபிக்கும் வகையில் இலங்கை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனத் ஜயசூரியவுக்கு ஓர் உணர்வுபூர்வமான அழைப்பு

ஒருநாள் ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் ..

அதேநேரம், இலங்கை அணியானது 1999ம் ஆண்டுக்கு பின்னர், உலகக் கிண்ண நொக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறும் முதல் சந்தரப்பம் இதுவாகும்.

இதேவேளை, உலகக் கிண்ண லீக் போட்டிகளில் இன்னும் 7 போட்டிகள் மீதமிருக்க அவுஸ்திரேலிய அணி மாத்திரமே அரையிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களுக்கு இங்கிலாந்து, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்டை நடத்தி வருகின்றன. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<