பங்களாதேஷில் இம்மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் 19 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான SAFF சம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் பங்கெடுக்கும், இலங்கை இளையோர் மகளிர் கால்பந்து குழாம் இன்று (08) பங்களாதேஷ் பயணமாகியிருக்கின்றது.
அப் கண்ட்ரி லயன்ஸை வீழ்த்திய சீ ஹோக்ஸ்; ரினௌன் – புளூ ஸ்டார் மோதல் சமநிலையில்
மொத்தம் ஐந்து நாடுகள் பங்குபெறும் 19 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இலங்கை மகளிர் கால்பந்து குழாம் இன்று இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் (FSL) வெளியிடப்பட்டது.
இந்த 19 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து அணிக்கு நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளில் இருந்து வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு, குறிப்பாக வடக்கினைச் சேர்ந்த வீராங்கனைகளும் இந்த குழாத்தில் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அந்தவகையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் வீராங்கனைகளான U. ஜோகிதா, R. கிருஷாசாந்தினி, M. வலன்டீனா மற்றும் S. தார்மிகா ஆகியோர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் குழாத்தில் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த அணியின் பயிற்சியாளராக மஞ்சுல சிரிசேன நியமனம் செய்யப்பட்டிருப்பதோடு, அணியின் பயிற்றுவிப்புக் குழாத்தினுள் TGDK. சமரசிங்க, DM. மேனக்கா திஸாநாயக்க, ரஞ்சித் ஹெட்டியராச்சி, JM. கங்கா S. ஜயசுந்தர மற்றும் பத்மநிதி செல்லையா, Dr. MRCF. ஜயசூரிய, மார்கஸ் V.
மோட்டா பெரேய்ரா மற்றும் ஹஷீம்டின் மொஹமட் பரூக் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
இதில் பத்மநிதி செல்லையாவும் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.
டிபெண்டர்ஸ் அணியை இலகுவாக வீழ்த்திய அப்கண்ட்ரி லயன்ஸ்
இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து அணி SAFF சம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் இம்மாதம் 11ஆம் திகதி பூட்டானை எதிர்கொள்ள, தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் 13ஆம் திகதி இந்தியாவையும், 15ஆம் திகதி நேபாளத்தையும், 19ஆம் திகதி பங்களாதேஷினையும் எதிர்கொள்கின்றது.
இதன் பின்னர் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு, குறித்த இறுதிப் போட்டியில் லீக் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் விளையாடும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து குழாம்
01. WMK. இமேஷா – விசாகா மகளிர் கல்லூரி – கொழும்பு
02. EMPM. ஏக்கநாயக்க – மலியதேவ மகளிர் கல்லூரி – குருணாகல்
03. JSS. சுபாஷி மதுஷானி – மலியதேவ மகளிர் கல்லூரி – குருணாகல்
04. WMOS. பண்டார – மலியதேவ மகளிர் கல்லூரி – குருணாகல்
05. JMHB. ஹுனுகும்புரா – மலியதேவ மகளிர் கல்லூரி – குருணாகல்
06. AMC. விஷ்மிக்கா பண்டார – மலியதேவ மகளிர் கல்லூரி – குருணாகல்
07. JAUK. ஜயக்கொடி – கவிசிகமுவ மத்திய கல்லூரி – குருணாகல்
08. NB. தரிந்தி ஜனித்தியா – விஹாரமகாதேவி மகளிர் கல்லூரி
09. T. ஹசினி கவ்சல்யா – புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயம் கல்லூரி – களுத்துறை
10. WAL. தரிந்தி ரன்சானி – ஜயக்கொடி மகா வித்தியாலயம் – கம்பஹா
11. U. ஜோகிதா – மஹாஜன கல்லூரி – யாழ்ப்பாணம்
12. R. கிருஷாந்தினி – மஹாஜன கல்லூரி – யாழ்ப்பாணம்
13. M. வலன்டீனா – மஹாஜன கல்லூரி – யாழ்ப்பாணம்
14. S. தார்மிகா – மஹாஜன கல்லூரி – யாழ்ப்பாணம்
15. P. இரோஷினி செவ்மாலி – சிறி சித்தார்த்த தேசிய பாடசாலை – அம்பலாங்கொடை
16. செனுரி கவின்யா கல்லாகே – சிறி சித்தார்த்தா தேசிய பாடசாலை – அம்பலாங்கொடை
17. மலிக்கா அமித் – கேட்வே சர்வதேச பாடசாலை
18. நிமேஷா சந்தருவானி – பந்திவேவ மஹா வித்தியாலயம்
19. ரஷ்மி கவீஷா – பந்திவேவ மஹா வித்தியாலயம்
20. MA. துலானி சந்தீப்பனி – பந்திவேவ மஹா வித்தியாலயம்
21. சந்துனி நிஷன்சல – புனித ஜோசப் கல்லூரி – கம்பொல
22. WMGS. பண்டார – SWRD பண்டாரநாயக்க மகா வித்தியாலயம் – கண்டி
23. KP. அமாவி அனுத்த கஹட்டபிட்டிய – பண்டாரநாயக்க மகா வித்தியாலயம் – வெயங்கொட
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<