பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியில் விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சிப்போட்டி நாளைய தினம் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
>> திமுத் – மெண்டிஸின் இணைப்பாட்டத்தின் மூலம் பலமடைந்த இலங்கை!
அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர்கொண்ட இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியின் தலைவராக இளம் வீரர் நிபுன் தனன்ஜய நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் இந்த குழாத்தில் இலங்கை தேசிய அணியின் வீரர்களான மினோத் பானுக, அஷேன் பண்டார, லசித் எம்புல்தெனிய, பிரமோத் மதுசான், பிரவீன் ஜயவிக்ரம, சதீர சமரவிக்ரம மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதுமாத்திரமின்றி உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துவரும் சஹான் ஆராச்சிகே, டில்ஷான் மதுசங்க, நிஷான் மதுஷ்க மற்றும் லக்ஷித மானசிங்க ஆகியோரும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் பதினொருவர்
லஹிது உதார, நிஷான் மதுஷ்க, நுவனிந்து பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, நிபுன் தனன்ஜய (தலைவர்), சஹான் ஆராச்சிகே, சாமிக்க கருணாரத்ன, லக்ஷித மானசிங்க, பிரவீன் ஜயவிக்ரம, டில்ஷான் மதுசங்க, பிரமோத் மதுசான், லசித் எம்புல்தெனிய, உதித் மதுசான், மினோத் பானுக, அஷேன் பண்டார
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<