இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC), பிரதி தலைவராகச் செயற்பட்ட K. மதிவானன், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியினை இராஜினமா செய்வதாக தெரிவித்திருக்கின்றார்.
முதல்தர கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
அந்தவகையில் மதிவானன் தனது இராஜினமாக் கடிதத்தினை, இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹன் டி சில்வாவிடம் இன்று (29) கையளித்திருந்தார்.
இதேநேரம், மதிவானன் தனது இராஜினமா கடிதத்தில் சொந்தக் காரணங்களைக் கருத்திற்கொண்டே பதவி விலகுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் விளையாட்டுடன் நீண்டகால தொடர்பினை பேணியிருக்கும் மதிவானன் கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் சபையின் முக்கிய பதவிகளில் இருந்து கடமைபுரிந்து இலங்கை கிரிக்கெட்டுக்கு சேவையாற்றியிருக்கின்றார். அதோடு, கிரிக்கெட் விளையாட்டு இனம்கண்ட சிறந்த நிர்வாகிகளில் ஒருவராகவும் மதிவானன் காணப்படுகின்றார்.
டுவிட்டரில் வைரலாகிய விராட் கோஹ்லி மரத்தில் இருக்கும் புகைப்படம்
தற்போது வெற்றிடமாகியுள்ள மதிவானின் பதவி இடத்தை எதிர்வரும் ஒகஸ்ட் 31ஆம் திகதி நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வின் போது இலங்கை கிரிக்கெட் சபை நிரப்பும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் பழம்பெரும் பாடசாலைகளில் ஒன்றான யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரியின் முன்னாள் மாணவரான மதிவானன், இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் கழகமான SSC கழகத்தின் முன்னாள் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<