சுழல் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான விஷேட அகடமிகளை அமைக்கவுள்ள இலங்கை கிரிக்கெட்

133

இலங்கை கிரிக்கெட் சபை  (SLC) இலங்கை உயர் செயற்திறன் நிலையத்தில் (HPC) வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களை விசேடமாக தயார்படுத்தும் நோக்கில், விசேட அகடமிகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.  

அனைத்துவகை போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்ற கேதர் ஜாதவ்!

தேசிய கிரிக்கெட் அணிக்கு சிறந்த சுழல்பந்து, வேகப்பந்துவீச்சாளர்களை உள்வாங்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்படவிருக்கும் இந்த விசேட அகடமிகளுக்கு இலங்கையின் உள்ள கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 105 வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.  

அதன்படி இந்த அகடமிகளில் பயிற்சி பெறும் வீரர்களை இனங்காணும் நிகழ்வு கடந்த வாரம் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கையின் A மற்றும் B முதல்தரக் கிரிக்கெட் கழகங்கள் மற்றும் அவற்றின் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இடம்பெற்றிருந்தது.  

தொடர்ந்து நிகழ்ச்சித்திட்டத்தின் வாயிலாக  தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் இருந்து கழகங்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் வெவ்வேறு அகடமிகளில் திறன் விருத்திக்காக உள்வாங்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

விசேட பயிற்சிகளுக்கா வேகப்பந்துவீச்சாளர்களை அனுஷ சமரநாயக்க, ரவீந்திர புஷ்பகுமார சாமில கமகே மற்றும் தர்ஷன கமகே ஆகிய பயிற்சியாளர்களும், சுழல்பந்துவீச்சாளர்களை பியால் விஜேயதுங்க, சஜீவ வீரக்கோன் மற்றும் சசித் பதிரன ஆகியோர் கண்காணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

தோல்வியுடன் T20 உலகக் கிண்ணத்தை ஆரம்பித்த இலங்கை அணி

அத்துடன் இந்த பயிற்சிக்காக உள்வாங்கப்பட்ட வீரர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களா அஜந்த மெண்டிஸ், தரங்க பரணவிதான, டில்ருவான் பெரேரா மற்றும் இன்டிக்க டி சேரம் ஆகியோரின் ஆளுகையில் நடைபெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

அதேநேரம் இந்த விஷேட பயிற்சி அகடமிகளை வெளி மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்க திட்டம் கொண்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<