உகண்டா தேசிய அணிக்கு உதவும் இலங்கை கிரிக்கெட்

541

உகண்டா தேசிய கிரிக்கெட் அணிக்கு (SLC) 14 நாட்கள் கொண்ட பயிற்சி முகாம் ஒன்றின் ஊடாக இலங்கை கிரிக்கெட் சபை உதவி புரியவிருக்கின்றது.  

டெஸ்ட் தொடரிலிருந்து முழுமையாக விலகிய விராட் கோஹ்லி!

அந்தவகையில் 14 நாட்கள் கொண்ட பயிற்சி முகாம் ஒன்றில் பங்குபெற இலங்கை வந்திருக்கும் உகண்டா ஆடவர் கிரிக்கெட் அணியானது காலி சர்வதேச மைதானத்தில் 7 T20 போட்டிகளில் ஆடவிருக்கின்றது. 

குறித்த T20 போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணிக்குழாம் உகண்டா அணியுடன் மோதவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம் போட்டிகள் நடைபெறும் காலப்பகுதியில் உகண்டா அணிக்கு தேவையாக இருக்கும் அனைத்து வசதிகளும் (உணவு, போக்குவரத்து, போட்டி நடுவர் வசதிகள் என அனைத்தும்) இலங்கை கிரிக்கெட் சபை மூலம் செய்து ஏற்பாடு செய்து கொடுக்கப்படவிருக்கின்றன. 

இலங்கை கிரிக்கெட் சபையானது .சி.சி. இன் அங்கத்துவ  உறுப்புரிமை பெற்ற நாடுகளில் ஒன்றுக்கு உதவும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

24 ஆண்டு சாதனையை முறியடித்த பெதும் நிஸ்ஸங்க!

அத்துடன் இது உகண்டா கிரிக்கெட் சபை இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேயவர்தனவிடம் உகண்டாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாடு ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த போது விடுத்த வேண்டுகோள் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<