ஜப்பான் கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கும் இலங்கை

MOU between SLC & JCA 2024

171

இலங்கை கிரிக்கெட்டின் ஒத்துழைப்புடன் ஜப்பானில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பான் கிரிக்கெட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கம் (JCA) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஜப்பான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நிபுணத்துவம் மற்றும் ஆதரவை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சம்மதம் தெரிவித்துள்ளது 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் இருந்து வீரர்கள், அணிகள் மற்றும் பயிற்சியாளர்களை ஜப்பானுக்கு அனுப்பவும், ஜப்பான் மற்றும் இலங்கையில் T20i போட்டித் தொடர்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

அதுமாத்திரமின்றி, ஜப்பான் கிரிக்கெட் வீரர்களுக்கு லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் ஆடும் அணிகளுடன் பயிற்சி பெறும் வாய்ப்பை வழங்கவும் சம்மதம் தெரிவிக்கப்பட்ள்ளது. 

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி நவோக்கி அலெக்ஸ் மியாஜி ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 

ஐசிசியின் முழு உறுப்பினர்களாக இல்லாத நாடுகளுக்கு ஆதரவை வழங்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த உடன்படிக்கை இலங்கை கிரிக்கெட்டால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<