இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் இராஜினாமா

ICC ODI World Cup 2023

325

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) செயலாளரான மொஹான் டி சில்வா தனது பதவியினை இராஜினமா செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பயிற்சிகளை இரத்து செய்தது இலங்கை அணி

அந்தவகையில் மொஹான் டி சில்வா தனது உடல்நிலையினைக் காரணம் காட்டி தனது பதவியை இராஜினமா செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சில்வாவின் பதவி இராஜினமா இலங்கை கிரிக்கெட் அணி நடைபெற்று வருகின்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் வெளிப்படுத்திய மோசமான ஆட்டத்தினை தொடர்ந்து வைக்கப்பட்ட விமர்சனங்களின் பின்னர் இடம்பெற்றிருக்கின்றது.

அதேவேளை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக சபை உறுப்பினர்கள் தங்களது பதவியில் இருந்து விலக வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்த சந்தர்ப்பம் ஒன்றிலேயே பின்னருமே மோஹன் டி சில்வாவின் பதவி விலகலானது நடைபெற்றிருக்கின்றது.

தான் பதவி விலகுவது தொடர்பில்  தனது இராஜினமா கடிதத்தில் மொஹான் டி சில்வா இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

”நிறைய விடயங்களை ஆராய்ந்த பின்னர், கிரிக்கெட் சபையின் நலனையும் எனது நலனையும் கருத்திற் கொண்டு (இலங்கை கிரிக்கெட் சபை) செயலாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்வதோடு, கிரிக்கெட் சபையின் நடவடிக்கைகள் எனது தற்போதைய உடல் நிலை காரணமாக பாதிக்கப்படக் கூடாது என்பதனையும் உறுதி செய்கின்றேன்.”

இதேவேளை மொஹான் டி சில்வா தற்போது தனது உடல்நிலைக்காக சிகிச்சைகள் பெற அவுஸ்திரேலியா பயணமாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<