இலங்கை விளையாட்டுத்துறையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தக்கூடியதும், இரசிகர்களை அதிகம் கவர்ந்த விளையாட்டாக பார்க்கப்படுவது இலங்கையின் கிரிக்கெட் ஆகும்.
கடந்த தசாப்த காலத்தை எடுத்துக்கொண்டால் பல சவால்களையும், தோல்விகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டிருந்த இலங்கை அணிக்கு நிறைவுபெற்ற 2024ம் ஆண்டானது சற்று நம்பிக்கை தரக்கூடியதாக மாறியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மீண்டும் துடுப்பாட்டத்தில் இலங்கை தடுமாற்றம்; T20i தொடர் நியூசிலாந்து வசம்
குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களில் பல்வேறு வரலாற்று சாதனைகளுடன் முக்கியமான வெற்றிகளை பெற்ற இலங்கை அணி, இங்கிலாந்திலும் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்து வரலாறு படைத்திருந்தது. இவ்வாறான வெற்றிகளுக்கு மத்தியிலும் T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்விகளும், ஐசிசி சம்பியன்ஷ் கிண்ண தொடருக்கு இலங்கை அணி தகுதிபெறாமையும் இந்த ஆண்டின் கறுப்பு புள்ளிகளாகவே பார்க்கப்படுகின்றன.
மறுபக்கம் இலங்கை மகளிர் அணியை பொருத்தவரை சில முக்கியமான மைல்கல்கள் எட்டப்பட்டிருக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற மகளிர் ஆசியக்கிண்ணத்தில் சம்பியனாகியமை மற்றும் தென்னாபிரிக்காவை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்தியமை போன்ற முடிவுகள் மகளிர் அணிக்கு பெருமையை சேர்த்துள்ளது.
இவ்வாறு இலங்கை கிரிக்கெட்டுக்கு சற்று நம்பிக்கை தந்த சிறப்பான அம்சங்களை நாம் இந்த கட்டுரையில் உற்று நோக்குவோம்,
டெஸ்ட் கிரிக்கெட்
இலங்கை அணியின் கடந்த ஆண்டின் முக்கிய இலக்காக இருந்த ஒரு விடயம் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதே ஆகும்.
இன்றுவரை இதற்கான வாய்ப்புகள் ஏனைய அணிகளின் முடிவுகளில் தங்கியிருக்கும் போதும், இதற்கான வாய்ப்பினை இலங்கை அணி தவறவிட்டமை பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் என்பதை இலகுவாக கூறமுடியும்.
தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து மோசமான ஆரம்பத்தை பெற்றிருந்தது. இந்த தோல்விகளுக்கு பின்னர் பங்களாதேஷ் சென்ற இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அபார வெற்றியை பதிவுசெய்தது. முதல் டெஸ்டை 328 ஓட்டங்களாலும், இரண்டாவது டெஸ்டை 192 ஓட்டங்களாலும் வெற்றியை பதிவுசெய்தது.
இந்த வெற்றயை அடுத்து இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வாய்ப்பிருந்தும் இலங்கை அதனை சரியாக பயன்படுத்தவில்லை.
முதல் T20I போட்டியில் இலங்கை அணி எதிர்பாரா தோல்வி
எனினும் மூன்றாவது போட்டியில் லஹிரு குமாரவின் வேகம், பெதும் நிஸ்ஸங்கவின் சதம், அரைச்சதம், தனன்ஜய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. இந்த வெற்றியானது 10 வருடங்களுக்கு பின்னர் இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி பெற்ற வெற்றியாகவும் மாறியது.
இதன் பின்னர் கடந்த செப்டெம்பர் மாதம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடருக்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், அந்த தொடரின் இரண்டு போட்டிகளையும் இலங்கையால் மிக இலகுவாக கைப்பற்ற முடிந்தது. முதல் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரண்டாவது போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியதும் சிறப்பம்சமாகும்.
இந்தப் போட்டிகளின் வெற்றியுடன், இலங்கையின் டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் கனவுக்கான கதவு திறக்கத் தொடங்கியது. அடுத்து ஆரம்பமான தென்னாபிரிக்க தொடரில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலும் இலங்கை அணிக்கு வாய்ப்பு என்ற நிலையில் இலங்கை அணி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தது.
இறுதியாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் எஞ்சியிருக்கும் நிலையில், இந்திய – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி சமனிலையாக வேண்டும். சமனிலையாகி அவுஸ்திரேலிய தொடரை 2-0 என கைப்பற்றினால் இலங்கை அணிக்கு டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்
இந்த ஆண்டு இலங்கை அணி விளையாடிய 18 ஒருநாள் போட்டிகளில் 13 போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், 3 போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது.
சொந்த மண்ணில் இடம்பெற்ற சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், இந்தியா, மே.தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், பங்களாதேஷ் பயணத்தில் மாத்திரம் ஒருநாள் தொடரை 1-2 என இழந்தது.
இதில் முக்கிய அம்சமாக இந்திய அணிக்கு எதிராக 27 ஆண்டுகளுக்கு பின்னர் (1997) ஒருநாள் தொடரை வெற்றிக்கொண்டு சாதனை புரிந்த இலங்கை ஒருநாள் அணி, 12 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்து அணியையும் ஒருநாள் தொடரில் வீழ்த்தியிருந்தது. இதில் குறிப்பாக இலங்கை அணி 2014ம் ஆண்டுக்கு பின்னர் ஒரே ஆண்டில் 5 ஒருநாள் தொடரை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மேஜர் லீக் மூன்று நாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஆரம்பம்
T20I கிரிக்கெட்
இந்த ஆண்டில் இலங்கை அணியின் T20I கிரிக்கெட் அதிகம் பேசுபொருளாக மாறியிருந்தது. குறிப்பாக ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், மே.தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்களை இலங்கை அணி வெற்றிக்கொண்டிருந்தது.
எனினும் T20 உலகக்கிண்ண தொடரில் முதலும் முக்கியமுமான போட்டியில் பங்களாதேஷிடம் தோல்வியடைந்ததன் காரணமாக அணியால் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறமுடியவில்லை.
அதனை தொடர்ந்து இலங்கையில் வைத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 1-1 என சமப்படுத்திய போதும், இந்தியாவிடம் தங்களுடைய சொந்த மண்ணிலும், நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டும் தொடர் தோல்விகளை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லங்கா பிரீமியர் லீக் (LPL)
லங்கா பிரீமியர் லீக் தொடரானது கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. ஐந்து அணிகள் பங்குபற்றிய இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி மார்வெல்ஸ் அணிகள் தகுதி பெற்றதோடு, தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றியீட்டியது. தொடர் ஆட்டநாயகனாகவும், இறுதிப் போட்டியின் நாயகனாகவும் ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் ரெய்லி ரொசோவ் தெரிவானார்.
லங்கா T10 சுப்பர் லீக்
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்து லங்கா T10 சுப்பர் லீக் தொடர் வருடத்தின் இறுதி மாதத்தில் நடைபெற்றது. ஜப்னா டைட்டன்ஸ் மற்றும் ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் ஆகிய அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
இறுதிப் போட்டியில் ஜப்னா டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணி 26 ஓட்டங்களால் சம்பியன்ஷிப்பை வென்றது. இறுதிப் போட்டி மற்றும் போட்டியின் நாயகனாக ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவானார்.
ஹொங் கொங் சிக்சர்ஸ் 2024
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஹொங் கொங் சிக்சர்ஸ் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தொடங்கியது. இவ்வருட தொடருக்காக, நான்கு பிரிவுகளின் கீழ் 12 அணிகள் போட்டிக் களத்தில் நுழைந்தன. இலங்கை லஹிரு மதுஷங்க தலைமையில் போட்டியில் பங்குபற்றியது. போட்டியின் ஆரம்பச் சுற்றை தோல்வியின்றி முடித்த இலங்கை, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது,
இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்தித்தது. இப்போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியைப் பதிவுசெய்ததன் மூலம் இரண்டாவது தடவையாக ஹொங் கொங் சிக்சர்ஸ் கிரிக்கட் சம்பியன்ஷிப்பை வென்றதுடன், ஆட்ட நாயகன் விருதை தனஞ்சய லக்ஷானும், போட்டியின் நாயகன் விருதை தரிந்து ரத்நாயக்கவும் வென்றனர்.
இலங்கை மகளிர் கிரிக்கெட்
இலங்கை மகளிர் அணிக்கு 2024ம் ஆண்டு தங்களுடைய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆண்டில் ஒன்றாக கருதமுடியும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து T20I தொடரை 2-1 என கைப்பற்றியது. அத்துடன் ஒருநாள் தொடரை , 1-1 என இலங்கை அணி சமன் செய்ததுடன், மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்கா நிர்ணயித்த 302 ஓட்டங்கள் என்ற மாபெரும் இலக்கை துரத்தி இலங்கை அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இதற்கு இலங்கை அணித்தலைவர் சாமரி அத்தபத்துவின் துடுப்பாட்டத்தில் பெறப்பட்ட 195 ஓட்டங்கள் மிகவும் சிறப்பம்சமாக மாறியது.
ஆஸி. வீரரினை உரசியமைக்கு விராட் கோலிக்கு அபாரதம் வழங்கிய ICC
அதன்பின், மகளிர் T20 உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெறுவதற்கான தகுதிகாண் தொடரில் இலங்கை பங்கேற்றது. இதில் தாய்லாந்து, ஸ்காட்லாந்து, உகாண்டா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை தோற்கடித்து மீண்டும் ஸ்காட்லாந்தை இறுதிப் போட்டியில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
இவ்வாறு T20 உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்ற இலங்கை மகளிர் வீராங்கனைகளுக்கு உலகக்கிண்ணத்தில் சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை. உலகக் கிண்ணத் தொடரில், A குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியில் பங்குபற்றிய இலங்கைப் மகளிர், திட்டமிடப்பட்ட நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து, ஆரம்பச் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனிடையே மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் ஒருநாள் தொடரை 3-0 என இலங்கை கைப்பற்றியதுடன், இருபதுக்கு 20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது.
இதன்பிறகு, கடந்த ஜூலை மாதம், இலங்கையின் ஏற்பாட்டின் கீழ் மகளிர் T20 ஆசிய கிண்ணம் நடைபெற்றது. இந்த தொடரில், ஆரம்ப சுற்றில் குழு B ஐ பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை பெண்கள் தாம் பங்குபற்றிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி போட்டியில் விளையாடியதுடன், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு, ஆசிய மகளிர் கிரிக்கெட்டின் பலம் வாய்ந்த இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை போராடியது. ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இலங்கைக்கு 166 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
சவாலை ஏற்றுக்கொண்ட இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்ததுஷ. இதில் ஹர்ஷிதா சமரவிக்ரம மற்றும் சாமரி அத்தபத்து ஆகியோர் அரை சதங்களை பதிவு செய்ய முடிந்தது. இறுதிப் போட்டியின் நாயகியாக ஹர்ஷிதா விருதை வென்ற அதேவேளை, தொடர் நாயகிக்கான விருதை இலங்கை அணித்தலைவர் சாமரி அத்தபத்து வென்றார்.
பெருமளவிலான இலங்கை பார்வையாளர்களால் சூழப்பட்ட மைதானத்தில் இலங்கை வீராங்கனைகள் தங்களின் முதல் ஆசியக் கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதலுடன் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் ஆரம்பம்
இலங்கை 19 வயதின் கீழ் அணி
இலங்கை 19 வயதின் கீழ் அணியும் இந்த ஆண்டு குறிப்பிடதக்க அளவு சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்த முயற்சி செய்திருந்தது.
ஆண்டின் தொடக்கத்தில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் தொடரில் பங்குபற்றிய இலங்கை அணி, ஆரம்பச் சுற்றில் சி குழுவில் இரண்டாவது இடத்தைப் பெற்று சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்த போதிலும், அணியால் 5வது இடத்தை மாத்திரமே பிடிக்க முடிந்தது.
இதனையடுத்து இலங்கை அணி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தில் அரையிறுதிக்கு முன்னேறிய போதும், அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது.
இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ஆசியக் கிண்ண தொடரில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனைகள் சுப்பர் 4 சுற்றை எட்டிய போதும், நான்காவது இடத்திலேயே தொடரை நிறைவுசெய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வீரர்களின் பிரகாசிப்புகள்
இவ்வருடத்தில் சர்வதேசத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸை கூறலாம்.
அவர் இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் விளையாடி 16 இன்னிங்ஸ்களில் 1049 ரன்கள் பெற்றிருந்தார். மேலும் அவரது துடுப்பாட்ட சராசரி 74.92 ஆக மாறியிருந்தது. இதில் 5 டெஸ்ட் சதங்களும், 3 அரைசதங்களையும் விளாசி இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற ஐந்தாவது வீரராக இவர் மாறியிருந்தார்.
இந்த ஆண்டு, இலங்கை அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத் ஜயசூரிய 9 போட்டிகளில் மட்டுமே விளையாடி 48 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆண்டு உலகில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 4வது இடத்தையும் பிரபாத் ஜயசூரிய பிடித்துக்கொண்டார்.
உபாதையினால் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் குறுகிய ஓய்வு
கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் உலகில் அதிக ஓட்டங்களை குவித்த மூன்று வீரர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது சிறப்பு. குசல் மெண்டிஸ் 742 ஓட்டங்களுடன் முதலிடத்தைப் பிடித்த அதேவேளையில், பெதும் நிஸ்ஸங்க 694 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அணித்தலைவர் சரித் 605 ஒருநாள் ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டார்.
வனிந்து ஹசரங்க கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். சிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் அவரது சிறந்த பந்துவீச்சு பிரதியில் 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இது இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் ஒரு வீரரின் சிறந்த பந்துவீச்சு பிரதியாகுவும் பதிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு T20I போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களை குவித்த குசல் மெண்டிஸ் 20 போட்டிகளில் 572 ரன்கள் விளாசியுள்ளார். மேலும், வனிந்து ஹசரங்க 18 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தி T20I களத்தில் இலங்கை சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இலங்கை அணித்தலைவர் சாமரி அத்தபத்து கடந்த வருடம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் களத்தில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களை பதிவு செய்ய முடிந்தது, மேலும் அவரது துடுப்பாட்டத்தில் 458 ஓட்டங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், அவரது துடுப்பாட்ட சராசரி 65.42 ஆகவும், ஓட்ட வேகம் 101.10 ஆகவும் இருந்தது.
மேலும் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த நான்காவது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இலங்கை அணிக்காக அதிக ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய கவீஷா தில்ஹாரி 8 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பெண்களுக்கான T20I களத்தில் உலகில் அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திற்கு வந்த சாமரி அதபத்து, 21 போட்டிகளில் 126.76 என்ற ஓட்ட வேகத்துடன் 40.00 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 720 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இவர் உள்ளார். மேலும், ஹர்ஷிதா சமரவிக்ரம இந்தப் பட்டியலில் 6ஆவது இடத்துடன் 585 ஓட்டங்களை பெற்று இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இதேவேளை, இவ்வருடம் பெண்கள் T20I போட்டியில் இலங்கை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனையாக கவீஷா தில்ஹாரி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<