இலங்கைக் கிரிக்கெட்: 2019 ஒரு மீள்பார்வை

இலங்கைக் கிரிக்கெட்: 2019 ஒரு மீள்பார்வை

285

நாம் பிரியாவிடை கொடுத்த 2019 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு மிக முக்கியமான வருடமாக அமைந்திருந்தது. அந்தவகையில், கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு எப்படி இருந்தது என்பதை மீட்டுவோம்.

ஜனவரி

இலங்கை கிரிக்கெட் அணி, 2019 ஆம் ஆண்டின் முதல் சர்வதேசப் போட்டியினை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் ஆரம்பித்தது. கடந்த ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டி இலங்கை கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்றது.

நான்கு ஆண்டுகளுக்குப்பின் இலங்கை அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்

தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணி ஜனவரி 05 ஆம் திகதி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடியது. மௌன்ட் மங்னாய் நகரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. எனினும், குறித்த போட்டியில் இலங்கை அணி வீரரான திசர பெரேரா அனைவரினது உள்ளங்களையும் கவரும் படியிலான ஒரு துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன்படி, வெறும் 57 பந்துகளுக்கு சதம் பெற்ற திசர பெரேரா நியூசிலாந்து அணிக்காக மிகவும் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரராக சாதனை படைத்திருந்தார். 

©AFP

இது தவிர, குறித்த போட்டியில் 13 சிக்ஸர்கள் பெற்ற திசர பெரேரா சனத் ஜயசூரியவின் சாதனையை முறியத்து இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் போட்டியொன்றில் அதிக சிக்ஸர்கள் பெற்ற வீரராகவும் சாதனை செய்திருந்தார்.

பின்னர், இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரினை 3-0 எனப் பறிகொடுத்ததோடு, அவர்களுக்கு எதிரான T20 போட்டியிலும் தோல்வியினை தழுவியிருந்தது. தொடர்ந்து ஜனவரி மாத இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இடம்பெற்ற 2  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் இலங்கை அணி இழந்தது. இவ்வாறாக இலங்கை அணி அடைந்த தொடர் தோல்விகள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2019 ஆம் ஆண்டு ஏமாற்றமான ஆரம்பம் ஒன்றை பெறக் காரணமாக இருந்தது.

பெப்ரவரி

ஜனவரி மாத இறுதியில்  அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் தோல்வியினைச் சந்தித்த இலங்கை கிரிக்கெட் அணி அதன் பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் மூன்று வகைப்  போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாட தென்னாபிரிக்கா சென்றிருந்தது. 

©Getty Images

இந்த சுற்றுப்பயணத்தில் முதல் கட்டமாக இரண்டு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. இந்த டெஸ்ட் தொடரில் இலங்கைத் தரப்பை திமுத் கருணாரத்ன முதல் தடவையாக வழிநடாத்தியிருந்தார். டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டேர்பன் நகரில் இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் இலங்கை அணி தோல்வியினை தழுவ இருந்த சந்தர்ப்பத்தில் போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய குசல் ஜனித் பெரேரா, டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு இதுவரையில் பார்த்திராத சிறந்த துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஒன்றை வெளிப்படுத்தினார்.  

நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்ட வில் சமர்வில்

நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்ட வில் சமர்வில்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட்…

டேர்பன் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்காக 153 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்த குசல் பெரேரா, விஷ்வ பெர்னாந்துவுடன் இணைந்து இலங்கை அணியின் கடைசி விக்கெட்டுக்காக 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து புதிய சாதனை செய்தார்.

குசல் பெரேராவின் துடுப்பாட்டத்தோடு இலங்கை கிரிக்கெட் அணி டேர்பன் டெஸ்ட் போட்டியை வென்றதோடு, தொடர்ந்து போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரினை 2-0 எனக் கைப்பற்றியது. மேலும், இலங்கை அணி இந்த வெற்றியுடன் தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி கொண்ட முதல் ஆசிய அணியாகவும் மாறியது. 

இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரில் அபார வெற்றியினை பதிவு செய்த பின்னர் அதே உற்சாகத்துடன் அவ்வணியினை ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் எதிர்கொண்டது. 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி வரை நடைபெற்ற இந்த இரண்டு தொடர்களையும் இலங்கை கிரிக்கெட் அணி துரதிஷ்டவசமாக பறிகொடுத்து நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

மே, ஜூன்

தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தினை அடுத்து ஏப்ரல் மாதத்தில் எந்த சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடாத இலங்கை கிரிக்கெட் அணி, உலகக் கிண்ணத் தயார்படுத்தல்களில் ஈடுபட்ட பின்னர் 2019 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்கொட்லாந்து பயணமாகியது. ஸ்கொட்லாந்தில் ஒருநாள் போட்டி ஒன்றில் விளையாடிய இலங்கை அணி அதன் பின்னர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாட இங்கிலாந்து சென்றது. 

இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இலங்கை வீரர்கள் கத்துக்குட்டிகளாகவே இருப்பார்கள் எனக் கூறப்பட்டிருந்த போதும் அவ்வாறு அமைந்திருக்கவில்லை. உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு எதிரான குழுநிலைப் போட்டிகளில் த்ரில் வெற்றிகளை பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி மொத்தமாக 9 குழுநிலைப் போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளைப் பதிவு செய்து கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் 6 ஆம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

©Getty Images

இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணிக்கு சந்திக ஹதுருசிங்க தலைமையில் இருக்காத புதிய பயிற்சியாளர் குழாம் ஒன்று நியமிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஜூலை 

கடந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி தமது முதல் சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் வீரர்களுடன் மோதியது. அந்தவகையில், இலங்கையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட குறித்த ஒருநாள் தொடரில் இலங்கை – பங்களாதேஷ் ஆகிய அணிகள் விளையாடின. 

இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தோல்விகளுக்கு முடிவுகட்டிய தென்னாபிரிக்கா

இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தோல்விகளுக்கு முடிவுகட்டிய தென்னாபிரிக்கா

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 107…

இத்தொடரில் இலங்கை வீரர்கள் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை 3-0 என்ற கணக்கில் வைட்-வொஷ் செய்ததுடன் இந்த தொடர் வெற்றி 2019 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த முதல் இருதரப்பு ஒருநாள் தொடர் வெற்றியாக அமைந்தது.

©AFP

இந்த ஒருநாள் தொடருடன் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரன லசித் மாலிங்க, ஒருநாள் சர்வேதச போட்டிகளுக்கு பிரியாவிடை கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

ஆகஸ்ட், செப்டம்பர்

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரினை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி, தமது சொந்த மண்ணில் வைத்து நியூசிலாந்து கிரிக்கெட் அணியினை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் எதிர்கொண்டது. 

இதில் இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இரு அணிகளும் விளையாடும் முதல் தொடராக அமைந்திருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை அடைந்திருந்தது.

டெஸ்ட் தொடரினை அடுத்து இரண்டு கிரிக்கெட் அணிகளும் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடியிருந்தன. இந்த T20 தொடரினை இலங்கை கிரிக்கெட் அணி 2-1 என பறிகொடுத்த போதிலும் குறித்த தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணியின் தலைவரான லசித் மாலிங்க நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுக்களை எடுத்து ஒருநாள், T20 என இருவகைப் போட்டிகளிலும் இவ்வகையான பதிவினை மேற்கொண்ட முதல் நபராக உலக சாதனை செய்திருந்தார். 

©Associated Press

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்களை அடுத்து கடந்த செப்ம்பர் மாத இறுதியில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், 3 T20 போட்டிகள் கொண்ட தொடர் என்பவற்றில் விளையாட பாகிஸ்தான் சென்றது. இந்த சுற்றுப்பயணம் மூலமே இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 10 வருடங்களில் முழுமையான கிரிக்கெட் தொடர்களுக்காக முதல் முறையாக பாகிஸ்தான் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பலர் பாதுகாப்பு காரணங்கள் காட்டி விளையாட மறுத்திருந்தனர். இதனால், இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக லஹிரு திரிமான்னவும், T20 அணியின் தலைவராக தசுன் ஷானக்கவும் செயற்பட்டிருந்தனர்.

புதிய சுழல் பந்துவீச்சாளரை அணியில் இணைக்கும் அவுஸ்திரேலியா

புதிய சுழல் பந்துவீச்சாளரை அணியில் இணைக்கும் அவுஸ்திரேலியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய …..

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரினை 2-0 என இழக்க, T20 தொடரினை 3-0 வைட்-வொஷ் வெற்றியுடன் கைப்பற்றியிருந்தது. அத்தோடு, T20 தரவரிசையில் முதல் நிலையில் காணப்பட்ட  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினை அவர்களது சொந்த மண்ணில் வைத்து T20 தொடர் ஒன்றில் வீழ்த்திய முதல் அணியாகவும் இலங்கை சாதனை  செய்தது.

©Sri Lanka Cricket

ஒக்டேபார், நவம்பர்

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியா சென்று அந்நாட்டு வீரர்களுடன் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடியிருந்தது. அதிக எதிர்பார்ப்புக்கள் இருந்த இந்த சுற்றுப் பயணத்தில் நடைபெற்ற T20 தொடரினை இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிடம் 3-0 எனப் பறிகொடுத்திருந்தது.  

டிசம்பர்

2019 ஆம் ஆண்டினை இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் நிறைவு செய்திருந்தது. 

பாகிஸ்தானின் சொந்த மண்ணில் இடம்பெற்ற இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பின்ஷிப்பின் ஒரு அங்கமாக இருந்ததோடு, இந்த டெஸ்ட் தொடர் மூலம் 10 ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டும் பாகிஸ்தானுக்கு திரும்பியிருந்தது.  

©AFP

இலங்கை கிரிக்கெட் அணி இந்த டெஸ்ட் தொடரில் புதிய தலைமைப் பயிற்சியாளரான மிக்கி ஆத்தரின் ஆளுகைக்குள் வந்த போதிலும் டெஸ்ட் தொடரினை 1-0 என இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<