இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயற்திறன் மையத்தை மீள கட்டியெழுப்பும் முகமாக, இலங்கை 19 வயதின் கீழ் அணி, இலங்கை A அணி மற்றும் இலங்கை வளர்ந்துவரும் அணிகளுக்கான புதிய பயிற்றுவிப்பு குழாம்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இலங்கை வளர்ந்துவரும் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் ருவான் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இலங்கை 19 வயதின் கீழ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த அவிஷ்க குணவர்தன இலங்கை A அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
>> இங்கிலாந்து தொடருக்கான இலங்கை வளர்ந்துவரும் குழாம் அறிவிப்பு <<
அவிஷ்க குணவர்தன A அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை 19 வயதின் கீழ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் இலங்கை வீரர் ஜெஹான் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெஹான் முபாரக் கொழும்பு றோயல் கல்லூரி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த காலங்களில் செயற்பட்டுவந்த நிலையில், தற்போது 19 வயதின் கீழ் அணியை பயிற்றுவிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்றுவிப்பாளர்களின் பதவிக்காலம் மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ள என இலங்கை கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை 19 வயதின் கீழ் அணியின் பயிற்றுவிப்பு குழாம்
- ஜெஹன் முபாரக் – தலைமை பயிற்றுவிப்பாளர்
- சம்பத் பெரேரா – உதவி மற்றும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்
- சமில கமகே – பந்துவீச்சு பயற்றுவிப்பாளர்
- கயான் விஜேகோன் – களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்
இலங்கை A அணியின் பயற்றுவிப்பு குழாம்
- அவிஷ்க குணவர்தன – தலைமை பயிற்றுவிப்பாளர்
- திலிண கண்டம்பி – உதவி பயிற்றுவிப்பாளர்
- மலிந்த வர்ணபுர – துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்
- சஜீவ வீரகோன்- பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர்
- உபுல் சந்தன – களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்
இலங்கை வளர்ந்துவரும் அணியின் பயிற்றுவிப்பு குழாம்
- ருவான் கல்பகே – தலைமை பயிற்றுவிப்பாளர்
- ருவின் பீரிஸ் – உதவி பயிற்றுவிப்பாளர்
- தர்ஷன கமகே – பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர்
- தம்மிக சுதர்ஷன – துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<