இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் வெளிப்படுத்திய மோசமான ஆட்டம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அவசர விளக்கம் கோரியிருக்கின்றது.
நியூசிலாந்து அணியுடன் இணையும் வேகப்பந்துவீச்சாளர்
இலங்கை கிரிக்கெட் அணி நேற்று (02) உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவை எதிர்கொண்டதோடு குறித்த போட்டியில் வெறும் 55 ஓட்டங்களுடன் சுருண்டு 302 ஓட்டங்களால் படுதோல்வியும் அடைந்திருந்தது.
இந்த நிலையில் இலங்கை அணியின் தோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களிடம் பூரண விளக்கம் ஒன்றை வழங்க கோரியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை அணியின் மோசமான ஆட்டத்திற்கு பல்வேறு கோணங்களில் விளக்கம் வழங்குமாறு இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களிடம் கேட்டிகப்பட்டிருக்கின்றது.
இதில் தேர்வாளர்கள் போட்டிகளுக்காக வீரர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது தொடர்பில் விளக்கம் கூறுமாறும், பயிற்சியாளர்கள் போட்டிகளின் பின்னர் விடயங்களை எவ்வாறு கையாண்டனர் என்பது தொடர்பில் கேட்கப்பட்டிருக்கின்றனர்.
இன்னும் விளையாடும் போட்டிகளில் தோல்வி மற்றும் மோசமான ஆட்டம் தொடர்பில் பொறுப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் சபையானது இந்த விடயங்கள் தொடர்பில் வெளிப்படையுடன் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றது.
இதேவேளை இலங்கை அணி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் எஞ்சியிருக்கும் போட்டிகளிலும், எதிர்கால தொடர்களிலும் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் பிரபல ரசிகர் “அங்கில் பேர்சி” மரணம்
இலங்கை அணி உலகக் கிண்ணத் தொடரில் அடுத்ததாக ஆடும் போட்டியானது பங்களாதேஷ் அணியுடன் எதிர்வரும் திங்கட்கிழமை (06) ஆரம்பமாகவிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<