ஆசிய றக்பி சம்பியன்ஷிப் பிரிவு 1 தொடரில் சம்பியனாகிய இலங்கை தேசிய றக்பி அணியை அங்கீகரிக்கும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபை பரிசுத்தொகையொன்றை வழங்கியுள்ளது.
இலங்கை றக்பி அணி கொழும்பில் நடைபெற்ற ஆசிய றக்பி சம்பியன்ஷிப் பிரிவு 1 இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி சம்பியனாக முடிசூடியது.
>> பானுக, ஜனித்தின் அதிரடியுடன் 252 ஓட்டங்களை விளாசிய SLC கிரீன்
குறித்த இந்த வெற்றிக்காக உழைத்த பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களை அங்கீகரிக்கும் முகமாக 30 ஆயிரம் அமெரிக்க டொலரை (89 இலட்சம்) இலங்கை கிரிக்கெட் சபை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
நாட்டின் அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் குறிப்பிட்ட இந்த தொகையை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக்குழு மற்றும் தலைவர் சம்மி சில்வா ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
அதுமாத்திரமின்றி இலங்கை றக்பி அணியின் இந்த வெற்றி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், முதல் தர றக்பி போட்டிகளில் மேலும் முன்னேறுவதற்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<