உங்களது சொந்த இன்னல்களில் திசரவை பாருங்கள்

4157
Thisara Perera

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தனது எடை பற்றி பிரித்தானிய பத்திரிகைகள் நையாண்டியாக குறிப்பிட்டபோது, அன்ட்ரூ பிளிண்டொப் தனது சந்தர்ப்பம் வந்ததும் அதற்கு சரியான பதிலடி கொடுத்தார். இது இன்னல்களின்போது எப்படி முகம் கொடுப்பது என்று சகலதுறை வீரர்களுக்கு பாடம் கற்பித்து கொடுப்பது போல இருந்தது. 2001 ஆம் ஆண்டு குளிர்கால சுற்றுப் பயணத்தின்போது கிறிஸ்ட்சர்ச்சில் (Christchurch) 137 ஓட்டங்களை விளாசிய பிளின்டொப், தான் இங்கிலாந்தின் மிகச் சிறந்த சகலதுறை வீரரான செர் இயன் பொத்தமுடன் ஒப்பிட்டு பேசப்படுவதை கண்டார். அப்போது, ‘எடை அதிகரித்திருப்பதை மோசமாக கருதவில்லை’ என்று அவர் பிரித்தானிய பத்திரிகைகளுக்கு பதிலடியாக குறிப்பிட்டிருந்தார்.

[rev_slider LOLC]

கடந்த ஆண்டு சப்ராஸ் அஹமட்டின் பிடியெடுப்பை தவறவிட்டு இலங்கை அணி வேதனைக்குரிய வகையில் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இருந்து வெளியேறியபோது எமது திசர பெரேரா கூட எல்லா வகையான குற்றச்சாட்டுகள் மற்றும் தொந்தரவுகளுக்கும் முகம் கொடுத்தார். ஆறு மாதங்கள் கழித்து அவர் இலங்கை அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார்.       

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான இறுதி T-20யின் நேரடி வர்ணனை

இலங்கை எதிர் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான T-20 தொடரின் இரண்டாவதும் .

சகலதுறை வீரர்களை ரசிகர்கள் உடன் இலக்கு வைப்பார்கள். இது தலைமுறை தலைமுறையாக உலகின் எல்லா இடங்களிலும் நடப்பதாகும். 2011 ஆம் ஆண்டு டர்பனில், தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை அணி முதல் டெஸ்ட் வெற்றி ஒன்றை பெற்று வரலாறு படைத்தபோது ஜக் கலிஸ் இலக்கானார். அப்போது கலிஸின் கண் பார்வை மங்கலடைந்து வருகிறது என்று தென்னாபிரிக்க ஊடகம் உடனடியாக குற்றம் சுமத்த ஆரம்பித்தது. இது மிகப்பெரிய தவறு என்பதை கலிஸ் விரைவாகவே நிரூபித்தார். தனது கோபத்தை இலங்கை பந்து வீச்சாளர்கள் முன் காட்டிய கலிஸ், நியூலாண்ட்ஸில் நடந்த தொடரை தீர்மானிக்கும் இறுதி டெஸ்டில் ஒரு தேர்ந்த துடுப்பாட்ட வீரருக்கான நேர்த்தியுடன் அபார இரட்டை சதம் ஒன்றைப் பெற்றார்.

இதேபோன்று இயன் பொத்தம் தொடர்புபட்ட பழைய உதாரணம் ஒன்றையும் குறிப்பிடலாம். 1986 ஆம் ஆண்டு மேற்கிந்திய சுற்றுப் பயணத்தின்போது இயன் பொத்தம், பார்படோஸ் அழகியான லின்டி பீல்ட் உடன் பாலுறவில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரித்தானிய ஊடகங்கள் சுமத்தியது அவருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. ‘கேத்திடம் கூற வேண்டாம்’ (Don’t tell Kath) என்ற இயன் பொத்தமின் சுயசரிதை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் வாசிக்க வேண்டிய ஒன்றாகும். முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவராக இயன் பொத்தம் 42 ஆண்டுகளாக கேத்ரின் பொத்தமுடன் திருமண பந்தத்தில் உள்ளார்.  

இம்ரான் கான் இங்கிலாந்தில் விளையாடிய காலத்தில் வொர்செஸ்டர்ஷைர் அணியில் இருந்து விலகி, சசெக்ஸ் அணியில் இணைய விரும்பியபோது, அந்த நகர்வு பல வகையிலும் பலவீனப்படுத்துவதாக இருந்தது. இதன்போது, இம்ரான் கான் இவ்வாறு வெளியேற நினைத்தது சிறு நகரான வொர்செஸ்டர்ஷைரில் தம்மை திருப்திப்படுத்த போதுமான பெண்கள் இல்லை என்பதே காரணம் என்று கூட ஊடகங்கள் குறிப்பிட்டன.

மற்றும் ஒருவர் ஷேன் வொட்சன். இவர் தமது பணியை சரியாக செய்யவில்லை என்று கூறி 2013இல் தீர்க்கமான மொஹாலி டெஸ்ட்டில் அவுஸ்திரேலிய தேர்வாளர்கள் அவரை நீக்கினார்கள். இந்த விடயம் அவுஸ்திரேலியாவின் சிறந்த அணித் தலைவர்களில் ஒருவரான கீத் மில்லருக்கும் பொருந்தும். இராண்டாம் உலகப் போர் காலத்தில் விமான ஓட்டியாக செயற்பட்ட அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதன் அழுத்தம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘அழுத்தமானது’ என்று குறிப்பிட்டார். ‘அழுத்தம் என்றால் என்ன என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். ஜப்பானிய போர் விமானம் மேலால் பறக்கும்போது அழுத்தமாக இருக்கும். கிரிக்கெட் ஆடும்போது அது இருக்காது’ என்றார்.

சம்பியன்ஸ் கிண்ணத்தின் பின்னரான வீழ்ச்சி பற்றி, திசர பெரேராவின் சில நண்பர்கள் எழுதியிருந்தார்கள். ஜிம்பாப்வேக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த போட்டிக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஐக்கிய அரபு இராச்சிய சுற்றுப்பயணத்தில் அணிக்கு திரும்பினார். சம்பியன்ஸ் கிண்ணத்தின் திருப்புமுனையான தனது பிடியெடுப்பை தவறவிட்ட நிலையில் அவரது வருகை குறித்து பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட்டிடம் கேட்கப்பட்டபோது, காயத்தில் உப்பு தடவுவதாகவே அவர் அதனை பார்த்தார். ‘திசர தனது வாழ்க்கையில் அதனை மறக்க மாட்டார், நானும் எனது வாழ்நாளில் அதனை மறக்க மாட்டேன்’ என்றார் சப்ராஸ்.   

இந்திய சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரில் திசரவை போதிய மாற்று வீரர் ஒருவர் இல்லாத நிலையில் அணித் தலைவராக நியமித்தது தோல்வியில் முடிந்தது. சகலதுறை வீரர்கள் அணித் தலைவராக சிறப்பாக செயற்பட்டதில்லை என்று வரலாறு காட்டுகிறது. நிச்சயமாக இம்ரான் கான் மற்றும் கபில் தேவ் இதில் விதிவிலக்கானவர்கள் என்பது உண்மையே. ஆனால் பெரும்பாலானவர்கள் பொறுப்பை செய்வதில் நெருக்கடியை சந்திக்கின்றனர். அதுவே திசரவுக்கும் நேர்ந்தது.

தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது தொடக்கம் திசர தனது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அவரது பந்துவீச்சு மேலதிக வேகம் பிறந்து பலம்பெற்றது. குறிப்பாக இறுதி ஓவர்களில் அவரது பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. 2019 உலகக் கிண்ணத்தில் அவரது பந்து வீச்சு சாதகமாக உள்ளது பற்றி சந்திக்க ஹத்துருசிங்கவும் அவதானம் செலுத்தியுள்ளார். 40 ஓவர்களுக்கு பின்னர் எதிரணிகள் தமது ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சிக்கும்போது அவரது பந்து வீச்சு முக்கியமானதாக அமையும்.

பங்களாதேஷ் அணிக்கெதிரான எனது வியூகத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் – ஹத்துருசிங்க

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு

அதேபோன்று துடுப்பாட்டத்தில் அவரது முக்கிய பங்களிப்பு அவதானத்திற்குரியது. வியாழக்கிழமை (15) டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை அணி சாதனை ஓட்டங்களை துரத்தியது. இதன்போது அவர் 18 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று பயங்கர சிக்ஸர்களை விளாசி 39 ஓட்டங்களைப் பெற்றது முக்கிய பங்களிப்பாக இருந்தது. பெரராவின் அதிரடி துடுப்பாட்ட திறமை பற்றி எந்த சந்தேகமும் இல்லை. எனினும் அவர் பந்தை அடிப்பதற்கான தேர்விலேயே பிரச்சினை உள்ளது. அவரது துடுப்பாட்டத்தில் ஒழுங்கு முறை ஒன்றை ஏற்படுத்துவது தேவையாக இருப்பதாக ஹத்துருசிங்க பார்க்கிறார்.

திசர பெரேரா ஓன் திசையில் (On Side) ஆதிக்கம் செலுத்தும் துடுப்பாட்ட வீரராக இருந்தபோதும் தற்போது அவர் ஒப்பீட்டளவில் அதிகம் ஓப் திசையில் (Off Side) பந்தை அடித்தாடுபவராகவும் மாறியுள்ளார். முத்தரப்பு போட்டியில் அவரது துடுப்பாட்டத்தில் தீ பறந்தபோதும், தனது பந்துவீச்சுக்காக அவர் தொடர் நாயகன் விருதை வென்றார். கடந்த மாதம் பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் அவர் வாங்கப்படாதது அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.   

திசர பெரேரா முதல்தர போட்டிகளில் தொடர்ந்து விளையாடாதது கவலை தரக்கூடியது. அப்போதைய நிர்வாகம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவரை ஓய்வு பெறச் செய்ய முயற்சித்தது. துல்லியமான முறையில் வீசி எறியப்பட்ட அவர், நான்கு பருவங்களாக முதல்தர போட்டிகளில் விளையாடவில்லை. பெரும்பாலான சகலதுறை வீரர்கள் உலகெங்கும் இருக்கும் செல்வந்த கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வெள்ளை பந்தில் மாத்திரமே தனது ஆட்டத்தை தொடர்கின்றனர்.

எவ்வாறாயினும் சிவப்பு பந்து கிரிக்கெட் குறுகிய கால கிரிக்கெட்டில் சிறந்த வீரராவதற்கு உதவுவதில்லை. நீண்ட ஓவர்கள் பந்துவீசுவதற்கு பந்துவீச்சில் ஒழுக்கத்தை பேண வேண்டும். சமிந்த வாஸ் ஒருமுறை குறிப்பிடும்போது, தான் அதிகம் பந்து வீசியே சிறந்த பந்து வீச்சாளரானதாக தெரிவித்தார். திசர பெரேராவை சிவப்பு பந்துக்கு திரும்ப வைப்பது கடியமானதாக இருக்கும். ஹதுருசிங்கவால் அது முடியாவிட்டால் எவராலும் அது முடியாது.

சகலதுறை வீரர்கள் விசித்திரமான வீரர்களாக அறியப்படுகின்றனர். அவர்கள் தொடர்பான சில கதைகள் உண்மையானது சில இட்டுக்கட்டப்பட்டவை. இந்த பிரபலமான கதை 2012 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலி கில்லார்ட் இலங்கை அணியினரை வரவேற்றிருந்தார். அவுஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமரான அவருக்கு இலங்கை அணி வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். திசர பெரேராவை அண்மித்த போது, அவர் திசரவுக்கு கைலாகு கொடுத்து, ‘உங்களின் விக்கெட் காப்பு எப்படி? என்று கேட்டார். ‘நான் விக்கெட் காப்பாளர் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்’ என்று திசர பதிலளித்தார்.