இரு பிரிவு டெஸ்ட் போட்டி முறைக்கு இலங்கை கிரிக்கட் எதிர்ப்பு

2919
Sri lanka v England

இலங்கை கிரிக்கட் சர்வேதேச கிரிக்கட் சபையினால் முன்மொழியப்பட்டுள்ள இரு பிரிவு டெஸ்ட் போட்டி முறைக்கு தமது முழுமையான எதிர்ப்பபை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் எடின்பரோ நகரில் இடம்பெற்ற ஐ.சி.சியின் ஒன்று கூடலின் போதே பிரதம நிறைவேற்று குழுவினால் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால கூறுகையில்சர்வேதேச கிரிக்கட் சபையினால் முன்மொழியப்பட்டுள்ள இரு பிரிவு டெஸ்ட் போட்டி முறைக்கு இலங்கை கிரிக்கட் முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறது. முடியுமானால் டெஸ்ட் போட்டிகளை 4  நாட்களைக் கொண்ட இளஞ்சிவப்பு (பிங்க்) நிறப் பந்துகளில் பகலிரவுப் போட்டிகளாக நடத்துங்கள். ஒருநாளில் 45 நிமிடங்கள் அதிகமாக செலவிட்டு 100 ஓவர்களை வீசி மொத்தமாக 400 ஓவர்களைக் கொண்ட போட்டியாக நடத்துங்கள் என்று கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் ஆதரவு அதிக அளவில் குறைந்துள்ளது. இதை சரிசெய்வதற்கான ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் பல முயற்சிகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தரவரிசையில் பிந்திய நிலையில் இருக்கும் அணிகளுக்கும், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து போன்ற அணிகளுக்கும் போதிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்ல்லை.

முன்னணி அணிகளான இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா , இங்கிலாந்து போன்ற அணிகள் இதுபோன்ற அணிகளுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த விரும்புவதில்லை. அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கிண்ணப் போட்டியில்தான் பெரிய அணிகளுடன் மோத வாய்ப்பு கிடைக்கும். இதனால் அந்த நாடுகளில் கிரிக்கெட் பிரபலம் அடையாமல் உள்ளது.

இதனால் அனைத்து நாடுகளுக்கும் சமமான அளவில் கிரிக்கெட் போட்டிகள் கிடைக்க .சி.சி. முயற்சிசெய்கிறது. இதனால் ஒருநாள் தொடரில் மிகப்பெரிய மாறுதலைக் கொண்டு வரப்போகிறது.

அதன்படி ஒருநாள் கிரிக்கெட் லீக் என்ற தொடரை நடத்தலாம் என பரிந்துரை செய்ய இருக்கிறது. இதன்படி பார்த்தால் இந்த லீக் 13 நாடுகளுக்கிடையில் நடக்கும். தற்போது தரவரிசையில் இருக்கும் முதல் 10 அணிகளுடன், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து இடம்பெறும். இன்னொரு அணி எது என்பதுதான் சிக்கல்.

இந்த அணிகள் ஒவ்வொரு அணிகளுடன் மூன்று போட்டிகளில் மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் சாம்பியன் கோப்பைக்குப் போட்டியிடும். இந்தத் தொடரை மூன்று வருடங்கள் நடத்த திட்டமிட்டு இருந்தது.

அத்தோடு இலங்கையோடு சேர்ந்து பங்களாதேஷ் கிரிக்கட் சபையும் இதற்கு  தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்