முதல்தர கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

204

கொவிட் – 19 வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட 2019-20 ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான இலங்கையின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் எதி கொவிட் – 19 வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட 2019-20 ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான இலங்கையின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் தடைப்பட்டிருந்த பிரதான கழகங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டிகளை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஒத்திவைப்பு

எனினும், போட்டித் தொடரின் அட்டவணையில் மேற்கொள்ளப்படவுள்ள ஒருசில மாற்றங்கள் தொடர்பில் விசேட பொதுச்சபை கூட்டமொன்றை நடத்தி அனைத்து கழகங்களினதும் அனுமதியைப் பெற்றுக் கொள்ள இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதன்காரணமாக, 14ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை கடந்த 10ஆம் திகதி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையின் விசேட பொதுச்சபை கூட்டம் நேற்று (28) இடம்பெற்றிருந்துடன், தடைப்பட்டிருந்த உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளை  முக்கியமான இரண்டு மாற்றங்களுடன் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

14 அணிகள் பங்குகொண்ட இம்முறை பருவகாலத்துக்கான முதல்தர கிரிக்கெட் தொடரானது Tier A மற்றும் Tier B என இரு குழுக்களாக நடைபெற்றன.

ஒவ்வொரு அணிகளும் லீக் சுற்றில் தலா 6 ஆட்டங்களில் விளையாடியிருந்தது. இதில் கொழும்பு கிரிக்கெட் கழகமும், சிலாபம் மேரியன்ஸ் கழகமும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றயீட்டி முதலிடங்களைப் பெற்றுக்கொண்டதுடன், புள்ளிகள் பட்டியலில் கடைசி 6 இடங்களைப் பெற்றுக்கொண்ட அணிகள் கேடயத்துக்கான பிரிவில் போட்டியிடும். 

லன்கன் ப்ரீமியர் லீக் திகதி அறிவிப்பு

முன்னதாக லீக் சுற்று ஆட்டங்கள் நான்கு நாட்கள் கொண்டதாக நடைபெற்றன. எனினும், கொவிட் – 19 வைரஸ் நிலைமைய கருத்திற் கொண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளை மூன்று நாட்கள் கொண்டதாக நடத்துவதற்கு நேற்று நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தின் போது அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், இம்முறை போட்டித் தொடரில் முன்னிலை பெறும் அணிகளை குறித்த பிரிவில் தரமுயர்த்துவதற்கோ அல்லது கடைசி இடத்தில் உள்ள அணிகளை கீழ் இறக்குவதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த இரண்டு முக்கிய தீர்மானங்களும் 2019-20 ஆம் ஆண்டு பருவகாலத்துக்கு மாத்திரம் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இலங்கையின் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், குறித்த காலப்பகுதியில் போட்டிகளை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி

மறுபுறத்தில் Tier B பிரிவுக்காக விளையாடுகின்ற கழகங்களில் அதிகளவு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். எனினும், கொவிட் – 19 வைரஸ் காரணமாக அனைத்து வீரர்களும் தங்களது நாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

இதனால் Tier B பிரிவுக்கான போட்டிகளை மீண்டும் எப்போது ஆரம்பிப்பது குறித்து இந்தக் கூட்டத்தின் போது எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே அந்தப் பிரிவுக்கான போட்டிகள் அனைத்து இவ்வருடம் நடைபெறுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இலங்கையின் உள்ளூர் முதல்தர கழங்களுக்கிடையில் நடைபெறுகின்ற தொடர்களை போட்டித் தன்மை கொண்டதாகவும், உயர்ந்த தரத்திலும் நடத்தும் நோக்கில் Tier A பிரிவில் கீழ் போட்டியிடுகின்ற 14 அணிகள் எண்ணிக்கையை அடுத்த பருவத்திலிருந்து 12 அணிகளாக குறைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

Dates Match Venue
10-11-12 August CCC vs Ragama CC MCG Katunayake
Colts CC vs Saracens SC P. Sara Oval
Army SC vs NCC SSC
BRC vs Chilaw Marians CC CCC
15-16-17 August CCC vs Saracens SC SSC
Colts CC vs Ragama CC CCC
Army SC vs Chilaw Marians CC P. Sara Oval
BRC vs NCC MCG Katunayake
20-21-22 August CCC vs NCC P. Sara Oval
Colts CC vs Chilaw Marians CC SSC
Army SC vs Ragama CC CCC
BRC vs Saracens SC MCG Katunayake
25-26-27 August CCC vs Chilaw Marians CC SSC
Colts CC vs NCC CCC
Army SC vs Saracens SC MCG Katunayake
BRC vs Ragama CC P. Sara Oval

Plate Fixtures

Dates Match Venue
10-11-12 August Negombo CC vs Lankan CC Moratuwa Stadium
SSC vs Tamil Union C & AC NCC
Moors SC vs Badureliya CC Colts Grounds
16-17-18 August Negombo CC vs Badureliya CC NCC
SSC vs Lankan CC Colts Grounds
Moors SC vs Tamil Union C & AC Moratuwa Stadium
22-23-24 August Negombo CC vs Tamil Union C & AC Colts Grounds
SSC vs Badureliya CC Moratuwa Stadium
Moors SC vs Lankan CC NCC

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க