இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்த்திருக்கும் புதிய ஆடை நிறுவனம்

895

ஆடை உலகில் தரத்திற்கு பெயர்பூத்துப் போன ஆடைகள் உற்பத்தியாளரான லோங் ஐலண்ட் ஆடை நிறுவனம் (LiCC) இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்து இலங்கையின் கிரிக்கெட் வீர, வீராங்கனைகளுக்குரிய சாதாரண உடைகள் (Casual Clothing) வழங்கும் உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களாக மாறியிருக்கின்றது.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் ஊதியம் அதிகரிப்பு

இலங்கை கிரிக்கெட் சபை முடிவுற்ற நிதியாண்டில் ஸ்திரமான சிறந்த …

லோங் ஐலண்ட் நிறுவனத்தின் இந்த அனுசரணை மூலம், இலங்கை கிரிக்கெட்டுடன் தத்தமது துறைகளில் கொடிகட்டிப்பறக்கின்ற இரண்டு நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன. இதன் மூலம் கிரிக்கெட் உலகில் பிரபல்யமாக இருக்கும் இலங்கையின் கிரிக்கெட் அணிகள் ஆடைரீதியில் இன்னும் அழகு பெறப்போகின்றது.  

இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்திருக்கும் இந்த புதிய ஆடைப்பங்காளர்கள் உயர்ரக ஆடைகளினை (Casual Clothing) இலங்கையின் ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணிக்கும், மகளிர் தேசிய கிரிக்கெட் அணிக்கும், “A” அணிக்கும், அபிவிருத்தி அணிக்கும், 19 வயதின்கீழ்ப்பட்ட அணிக்கும், இலங்கை கிரிக்கெட் சபையின் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் வழங்குவர்.  

இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா LiCC உடன் இணைந்தது பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்.  

இலங்கை கிரிக்கெட் LiCC ஜீன்ஸ் உடன் (நிறுவனத்துடன்) பங்காளர்களாக மாறுவதில் மிகவும் சந்தோசமடைகின்றது. இந்த நிறுவனம் இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிகளுக்குரிய சாதாரண ஆடைப்பங்காளர்களாக இனி செயற்படும். LiCC ஆனது எங்களது கிரிக்கெட் அணிகள் போட்டிகளில் விளையாடும் போது கொண்டிருக்கின்ற மனநிலை போன்று மிருதுவானதாகவும், தைரியமானதாகவும், அழுத்தமற்றதாகவும் இருக்கும் என நாங்கள் நம்புகின்றோம். “

Photos: Launch of LiCC as Sri Lanka Cricket’s Official Casual Clothing Partner

ThePapare.com | Viraj Kothalawala | 22/05/2018 Editing and re-using images without …

லோங் ஐலண்ட் ஆடை நிறுவனமானது (LiCC) எப்போதும் புதிய தொழில்நுட்பங்களினை வரவேற்கும் மத்திய நிலையமாக இருந்து வருகின்றது. இதனால் இங்கு உருவாக்கப்படும் ஆடைகள் அழகிய அமைப்பிலும், அணிய மிருதுவானதாகவும் இருக்கின்றன. இலங்கையின் தேசிய வீர, வீராங்கனைகள் உள்நாட்டு சுற்றுப் பயணங்களிலோ அல்லது வெளிநாட்டுப் பயணங்களிலோ இந்த நிறுவனத்தின் ஜீன்ஸ் (காற்சட்டை) மற்றும் டிசேர்ட் (மேற்சட்டை) போன்ற ஆடை வகைகளை அணியும் போது அது இரண்டு இடங்களிலும் ஒரே மாதிரி அழகாகவே இருக்கும்.

ஹிர்தரமானி குழும நிறுவனங்களின் இயக்குனரான வினோத் ஹிர்தரமானி பேசும் போது, LiCC ஜீன்ஸ் (நிறுவனம்) பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டு, ஜீன்ஸ் ஆடைத்துறை விருத்தியில் தற்போது பிரம்மிக்க வைக்கும் பல சாதனைகளை செய்திருக்கின்றது எனக் குறிப்பிட்டதோடு இதற்காக அவர்கள் நூறு வருடங்களுக்கு மேல் விருத்தியடைந்த ஆடை தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தியிருக்கின்றனர் எனவும் கூறினார்.

மேலும் பேசிய அவர் “ LiCC இன் நவீன வடிவமைப்பு புலனும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் உள்ள ஆர்வமும், இலங்கை கிரிக்கெட்டின் விரிவும் யாராலும் வெற்றி கொள்ள முடியாத ஒரு உறுதியான இணைப்பாக இருக்கின்றது. “  என்றார்.

LiCC இன் தாய் நிறுவனமான ஹிர்தரமானி குழுமம், பல்வேறுபட்ட வியாபாரங்களில் கடந்த நூறு ஆண்டுகளாக அனுபவம் கொண்ட ஒன்றாக இருக்கின்றது. ஆறு நாடுகளுக்கு மேல் விஸ்தீரனப்படுத்தப்பட்டிருக்கும் இந்த குழுமத்தில் 60,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஆடைத்துறை தவிர ஹிர்தரமானி நிறுவனம் பொழுதுபோக்கு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வலு (Power) போன்ற துறைகளிலும் முதலீடுகள் செய்து முன்னணியில் இருக்கின்றனர்.  

கிரிக்கெட் காணொளிகளைப் பார்வையிட…