கொழும்பு மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 105 பாடசாலைகளுக்கு 84.3 மில்லியன் ரூபா பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்களை இலங்கை கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய கிரிக்கெட் பயண‘ நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள கடுவெல மற்றும் கோட்டே ஆகிய கல்வி வலயங்களைத் தவிர்ந்த 45 பாடசாலைகளுக்கு சிரேஷ்ட அணிகளுக்கான கிரிக்கெட் உபகரணங்களும், 22 பாடசாலைகளுக்கு கனிஷ்ட அணிகளுக்கான கிரிக்கெட் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர முதல் பிரிவில் கிரிக்கெட் விளையாடும் பாடசாலைகளுக்கு ஆடுகளத்தை வெட்டி பதப்படுத்தும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
>> இரத்தினபுரியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (29) இடம்பெற்ற இந் நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, இலங்கை கிரிக்கெட் சபையின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த, இலங்கை கிரிக்கெட் சபையின் தேசிய அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் கமல் தர்மசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<