வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணி இலங்கை கிரிக்கட்டால் கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்று பாதிப்படைந்தவர்களின் வீட்டைச் சுத்தம் செய்யும் பணி இடம்பெற்றது.
நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது இலங்கை
இவர்களது உதவும் பணியில் 3000ற்கும் அதிகமான உலர் உணவு, படுக்கை பொருட்கள் மற்றும் ஆடை அடங்கிய உதவிப் பொதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டது. அத்தோடு மொத்தமாக 10,000 லீட்டர் கொள்ளளவு நீர் போத்தல்கள் அவர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்தப் பணியில் 300க்கும் அதிகாமான தொண்டர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள், கிரிக்கட் வீரர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.
இவர்களது திட்டத்தின் 2ஆவது படியாக அடுத்த வாரம் பள்ளிப் புத்தகங்கள், சீருடை போன்றவை விநியோகிக்கப்படவுள்ளன.