பங்களாதேஷ் தொடரில் குலசேகரவை கெளரவிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை

6739
PHOTO - AFP

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் மற்றும் இலங்கை அணிகள் இடையே நடைபெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியினை, அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட வேகப் பந்துவீச்சாளர்  நுவான் குலசேகரவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) சமர்ப்பணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை அணியின் வெற்றிக்கான காரணத்தை கூறிய அவிஷ்க

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை…..

அதன்படி, இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டிக்காக நுவான் குலசேகரவிற்கு விஷேட அழைப்பு ஒன்றினை வழங்கியிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை, குறித்த போட்டியில் நுவான்  குலசேகர இலங்கையின் கிரிக்கெட்டிற்கு ஆற்றிய சேவைகளை கெளரவிக்கும் விதத்தில் பாராட்டு நிகழ்ச்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் 2003ஆம் ஆண்டில் இலங்கை அணிக்காக சர்வதேச அறிமுகத்தை பெற்றுக் கொண்ட நுவான் குலசேகர, அதனை அடுத்து 2014ஆம் ஆண்டின் T20 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெல்ல முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நுவான் குலசேகர, இலங்கை அணி வீரர்களில் முக்கிய பாத்திரத்தினை எடுத்து கொண்ட ஒருவராக இருக்கின்றார். அவர் தேசிய அணிக்காக விளையாடும் காலத்தில் அதிதிறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். அதேநேரம், அவர் மைதானத்தில் வழங்கிய பங்களிப்புக்கள் மூலம் இலங்கை அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுக்க காரணமாகவும் அமைந்திருந்தார். அவரது தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா தெரிவித்திருந்தார்.

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 2011ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் முக்கிய வீரராக காணப்பட்ட நுவான் குலசேகர, 2009ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள்  தரவரிசையில் முதலிடத்திலும் இருந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அவிஷ்க பெர்னாந்துவின் அதிரடியுடன் ஒருநாள் தொடர் இலங்கை வசம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான…..

“அவர் (நுவான் குலசேகர) மைதானத்திற்கு வெளியேயும் உள்ளேயும் அனைவருக்கும் முன்னுதாரணமான ஒரு மனிதராக இருக்கின்றார். இதனால், இளம் கிரிக்கெட் வீரர்கள் அவரை முன்னுதாரணமாக எடுக்க முடியும். ஒழுக்கமாகவும், எளிமையாகவும் நடந்து கிரிக்கெட்டில் பெரிய அடைவு மட்டம் ஒன்றினை குலசேகர தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அடைந்திருக்கின்றார். இதுவே அவர் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வெற்றிகரமாக மாற உதவியிருக்கின்றது.” என இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை கிரிக்கெட் சபை, நுவான் குலசேகரவினை கெளரவிக்க இருக்கும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (31) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<